For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்புவை அதிகம் கலாய்ப்பது ஏன்? - ரகசியத்தை உடைத்த நடிகர் ஷாரா!

  |
  நா DIRECT பன்ற படத்துல சிம்புதான் HERO | ACTOR SHA RAH INTERVIEW-PART-1 | V-CONNECT |FILMIBEAT TAMIL

  சென்னை : யுடியூப் மூலம் பிரபலமானவர்கள் பலர் சினிமாவுக்கு வருகிறார்கள். அந்த வகையில், 'டெம்பிள் மங்கிஸ்' என்ற யூடியுப் சேனல் மூலம் பிரபலமான ஷாரா, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார்.

  திரைப்பட விமர்சனம், குறும்படங்கள், பாக்ஸ் ஆபிஸ், நடிகர்களை கிண்டல் செய்வது என்று யூடியூபில் தனக்கென்று தனி ரசிகர்கள் வட்டத்தை பெற்றிருக்கும் ஷாரா, பெரிய நடிகர், சின்ன நடிகர் என்று அனைவரையும் வஞ்சனை இல்லாமல் கலாய்க்ககூடியவர். அதிலும், நடிகர் சிம்புவை அதிகமாகவே கலாய்ப்பார். அப்படி சிம்புவை அவர் கலாய்க்க என்ன காரணம், சிம்பு மீது அவருக்கு தனிப்பட்ட கோபம் ஏதாவது இருக்கிறதா? என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கான ரகசியத்தை ஷாராவே, நமக்கு அளித்த பேட்டியில் உடைத்திருக்கிறார்.

  Why is over tease Simbu? - Actor Shara who broke the secret!

  சின்ன வயதில் இருந்தே சிம்புவின் தீவிர ரசிகரான ஷாரா, அவர் ஹீரோவாக நடித்த முதல் படத்தை பார்த்து ரொம்பவே அப்ஷட்டாகிவிட்டாராம். அதன் பிறகு 'மன்மதன்' மூலம் சிறு நம்பிக்கை அளித்த சிம்புவை கொண்டாடிய ஷாராவுக்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா' இனி நம்ம தமிழ் சினிமாவின் தல சிம்பு தான், என்ற நம்பிக்கை ஏற்பட்டதாம். ஆனால், அதன் பிறகு சிம்பு செய்த பல சொதப்பல்கள், நல்ல படங்களை கைவிடுவது, போன்ற விஷயங்களால் சிம்பு மீது அவருக்கு கோபம் ஏற்பட்டதாம். ரசிகர்கள் தாங்கள் விரும்பும் நடிகர்களிடம் நல்ல படங்களை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள், ஆனால், சிம்புவால் அதை கூட சரியாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, எந்த வம்புலும் சிக்காமல் தொடர்ந்து படம் கூட நடிக்க முடியவில்லையே, என்ற கோபத்தில் தான் அவரை கலாய்க்க தொடங்கினாராம்.

  Why is over tease Simbu? - Actor Shara who broke the secret!

  ஆனால், இப்போதும் சிம்புவின் தீவிர ரசிகராக இருக்கும் ஷாரா, தான் படம் இயக்கினால் அதில் சிம்புவை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன், அவருக்கான கதையும் தன்னிடம் இருக்கிறது, என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், தற்போது திரைப்படம் இயக்குவதை விட, வெப் சீரிஸ் இயக்குவதில் ஆர்வம் காட்டும் ஷாரா, விரைவில் ஒரு வெப் சீரிஸை இயக்கி தயாரிக்கவும் இருக்கிறாராம்.

  யுடியூபில் நடிகர்களை கலாய்க்கும் போது அவரது ரசிகர்களிடம் இருந்து எதிப்பு வரவில்லையா, குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று கேட்டதற்கு, ரஜினிக்கே ரசிகர்கள் இல்லாத போது எம்.ஜி.ஆர்க்கு எங்கிருந்து ரசிகர்கள் இருக்கப் போகிறார்கள், என்று நம்மிடமே கேட்கிறார். என்னது ரஜினிக்கு ரசிகர்கள் இல்லையா! என்று நாம் ஆச்சரியப்படுவதை அறிந்துக் கொண்டவர், விஜய், அஜித் ரசிகர்களே தற்போது அரை கிழவர்களாகிவிட்டார்கள். அப்படி என்றால் ரஜினியின் ரசிகர்கள் எப்படி இருப்பார்கள், என்று பாருங்கள், பிறகு எங்கிருந்து எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருப்பார்கள். தற்போது இளம் ரசிகர்கள் என்றால் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களுக்கு தான் இருப்பார்கள். அஜித், விஜய் ஆகியோரது ரசிகர்கள் எல்லாம் என்னை போன்ற அரை கிழவர்களாக தான் இருப்பார்கள், என்று கூறுகிறார்.

  'மாநகரம்' மூலம் நடிகராக அறிமுகமான ஷாரா, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தொடர்ந்து, 'மீசையை முறுக்கு', 'நட்பே துணை', 'கோமாளி', 'சூப்பர் டூப்பர்' சமீபத்தில் வெளியான விஷாலின் 'ஆக்‌ஷன்' என அனைத்து படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

  தற்போது ஷாராவின் நடிப்பில் 'ஓ மை கடவுளே' மற்றும் 'பல்லு படாம பாத்துக்கணும்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 'காதலிக்க யாருமில்லை', 'நான் சிரித்தால்', 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா', 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' ஆகியப் படங்களில் ஷாரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

  English summary
  Many people who are famous through Youtube come to the cinema. That way, the tempsShara, a popular comedy in the current Tamil cinema via the YouTube Channel Growing up as an actor.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X