அது ஏன் விஜய்யின் கத்தி இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்துகிறார்கள் என தெரியுமா?
சென்னை: விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏன் உள்ளூரில் அல்லாமல் லண்டனில் நடத்துகிறார்கள் என்று தெரியுமா?
துப்பாக்கி படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸும், விஜய்யும் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் படம் கத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. துப்பாக்கியை போன்று கத்தியும் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மட்டும் வெளிநாட்டில் நடத்தப் போகிறார்கள்.

லண்டன்
கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அங்கு ஏன்?
இங்கிலாந்தில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதனால் அவரின் படங்கள் அங்கு நல்ல வசூலை பெறும். அந்த நன்றிக் கடனுக்காக தான் லண்டனில் இசை வெளியீட்டு விழாவவை நடத்துகிறார்களாம்.

ஜில்லா
விஜய் நடித்த ஜில்லா, துப்பாக்கி, வேலாயுதம், தலைவா, நண்பன் ஆகிய படங்களில் இங்கிலாந்தில் நல்ல வசூலை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர்
கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.

சங்கீதா விஜய்
விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனைச் சேர்ந்தவர். விஜய்யும் ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் குடும்பத்துடன் லண்டன் தான் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











