LEO: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய லியோ... விஜய் - லோகேஷின் மாஸ்டர் பிளான் இதுதானா?

சென்னை: விஜய்யின் தளபதி 67 பட டைட்டில் லியோ என படக்குழு தரப்பில் இருந்து நேற்று அறிவிப்பு வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில் தளபதி 67 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

லியோ டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட லியோ ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸாகவுள்ளது ஏன் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

 விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வந்த தளபதி 67 டைட்டிலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். குருதி, குருதிப் புனல் என பல டைட்டில்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவந்த நிலையில், சர்ப்ரைஸாக தளபதி 67 டைட்டில் லியோ என படக்குழு அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் LCU கான்செப்ட்டில் இருக்கும் என்றே தகவல் கிடைத்துள்ளது. நேற்று வெளியான டைட்டில் ப்ரோமோவும் அதனை உறுதி செய்துள்ளது.

 லியோ ரிலீஸ் தேதி

லியோ ரிலீஸ் தேதி

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது படக்குழு. இந்நிலையில், லியோ டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

 தீபாவளி ரேஸில் இருந்து விலகல்

தீபாவளி ரேஸில் இருந்து விலகல்

முன்னதாக விஜய்யின் லியோ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. பொங்கலுக்கு வாரிசு வெளியானதைப் போல, தீபாவளிக்கு லியோ ரிலீஸாகும் என ரசிகர்களும் அதிக நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே ஆயுத பூஜைக்கு லியோ ரிலீஸாவது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது இந்நிலையில், தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 19ம் தேதி புதன்கிழமை என்பதால் ஆயுத பூஜை விடுமுறையோடு மொத்தம் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் தனியாக மாஸ் காட்டலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

 ஜெயிலர், இந்தியன் 2 ரிலீஸ்

ஜெயிலர், இந்தியன் 2 ரிலீஸ்

இன்னொரு பக்கம் ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 திரைப்படங்கள் தீபாவளி ரேஸில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதம் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளதாம். மேலும் இந்த இரண்டு படங்களுமே தீபாவளி பாக்ஸ் ஆபிஸை குறிவைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் விஜய்யின் லியோ ஆயுத பூஜைக்கு வெளியாவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், 19 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - கமலின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக ரஜினியின் சந்திரமுகியும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X