twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜுன் 15 ரஜினி வாழ்க்கையில் முக்கியமான நாள்...ஏன் தெரியுமா ?

    |

    சென்னை : சில நடிகர், நடிகைகள் தங்களுக்கு ராசியான நம்பர், கிழமை, தேதி என பல வைத்திருப்பார்கள். மிக சிலருக்கு மட்டும் சில நாட்கள் மிக முக்கியமான நாட்களாக இருக்கும். அப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு முக்கியமான நாள் என்றால் அது ஜுன் 15.

    அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய ரோலில் நடித்து கே.பாலச்சந்தரால் சினிமாவிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் ரஜினிகாந்த். கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்து, சில படங்களில் வில்லன் ரோலில் நடித்து, பிறகு ஹீரோவானவர். படிப்படியாக வளர்ந்து, பல வெற்றி படங்களைக் கொடுத்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை அடைந்தவர்.

    ரஜினிக்கு ஜுன் 15 மிக முக்கியமான நாள் என்றே சொல்லலாம். ரஜினியின் மிக முக்கியமான 4 பிளாக்பஸ்டர், வெர்கிரீன் ஹிட் படங்கள் இந்த தேதியில் தான் ரிலீசாகின. ரஜினியின் பல படங்கள் 15 ம் தேதியிலேயே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்பது பலரும் அறியாத ரகசியம். அப்படி ஜுன் 15 ல் ரிலீசான முக்கியமான 4 ரஜினி படங்களை இங்கே பார்க்கலாம்.

    பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷே சம்பளத்தை உயர்த்தல.. நெல்சன் இஷ்டத்துக்கு ஏத்திட்டாரா? பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷே சம்பளத்தை உயர்த்தல.. நெல்சன் இஷ்டத்துக்கு ஏத்திட்டாரா?

    கை கொடுக்கும் கை

    கை கொடுக்கும் கை

    ஜெ.மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரேவதி நடித்த படம் கை கொடுக்கும் கை. ரஜினி என்றாலே ஸ்டைல், அதிரடி சண்டை காட்சிகள் தான். ஆனால் அப்படி எந்த மாசும் இல்லாமல் மிக சாதாரணமான குடும்ப தலைவன் ரோலில் ரஜினி நடித்த படம் இது. 1984 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி ரிலீசான இந்த படம் தான் ரஜினி - ரேவதி இணைந்து நடித்த ஒரே படம். அதற்கு முன்போ, அதற்கு பிறகோ இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை.

    அதிசயப்பிறவி

    அதிசயப்பிறவி

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கனகா, ஷீபா நடித்து 1990 ம் ஆண்டு ரிலீசான படம். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் மிக முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரஜினி நடித்த முதல் முழு நீள காமெடி படம் என்று கூட சொல்லலாம். வித்தியாசமான கதையுடன் காமெடியாக எடுக்கப்பட்ட படம். இதுவும் ஜுன் 15 ம் தேதி தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

    பெத்தராயுடு

    பெத்தராயுடு

    தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா நடிப்பில் வெளிவந்த நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் தான் பெத்தராயுடு. 1995 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி இந்த படம் ரிலீசானது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. மோகன்பாபு தயாரித்த இந்த படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை எழுதினார். ரஜினி, சவுந்தர்யா, பானுப்பிரியா நடித்த இந்த படம் ரஜினியின் மிக முக்கியமான பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்று.

    சிவாஜி தி பாஸ்

    சிவாஜி தி பாஸ்

    டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக நடித்த படம் சிவாஜி. 2007 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்த சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா, விவேன், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாடி இருப்பார்.

    இத்தனை நாள் இது தெரியாம போச்சே

    இத்தனை நாள் இது தெரியாம போச்சே

    அது மட்டுமல்ல ரஜினி நடித்த காலா, அண்ணாமலை போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களும் ஜுன் மாதத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஜினி ரசிகர்கள் ஜுன் மாதத்தை ரஜினி மாதம் என்றே கொண்டாடுகிறார்கள்.

    English summary
    June 15th was most important date for Rajini. Because Rajini's most memorable movies were released on this date. Rajini's Kai kodukum Kai, Adhisaya Piravi, Petharayudu, Sivaji the Boss movies are released on June 15th. Coincidently Rajini's movies likes Kaala, Annamalai movies also released in the month of June.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X