Jyothika: கங்குவா படத்தின் முதல் 30 நிமிடங்கள் மட்டும் சொதப்பல்னு ஜோதிகா சொல்ல இவங்கதான் காரணமா?
சென்னை: சூர்யா - தீஷா பதானி, நட்டி, போஸ் வெங்கர், பாபி தியோல், கார்த்தி, கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா விமர்சகர்களின் விமர்சனங்கள் குறித்தும் படம் குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்தார். அதில் அவர் படத்தின் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை எனத் தெரிவித்தார். சூர்யாவின் மனைவியே இப்படிக் கூறியது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்நிலையில் ஜோதிகா அவ்வாறு கூற காரணமே வேறு என்ற பேச்சுகள் இப்போது எழுந்துள்ளது.
கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா ஹிட் படமாக மாறும் எனத் தெரிவித்திருந்தனர். இதுமட்டும் இல்லாமல் படம் ரூபாய் 2 ஆயிரம் கோடிகள் வசூல் செய்யும் எனவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டது. படக்குழுவினரே இவ்வளவு நம்பிக்கையோடு இருந்ததால் ரசிகர்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் படத்தின் விமர்சனங்கள் படக்குழு எதிர்பார்த்ததைப் போல் இல்லை. குறிப்பாக படத்தின் இசை பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

இந்நிலையில் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா படம் குறித்தும் படத்தின் விமர்சனங்கள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ சூர்யாவின் மனைவியாக இதனை எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவேண்டும் எனும் சூர்யாவின் கனவை நினைத்து பெருமைப் படுகின்றேன். படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதிதான். படத்தில் பாராட்ட பல விஷயங்கள் உள்ளது.
நெகடிவ் விமர்சனம்: குறிப்பாக ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா ஒர்க், 3டி தொழில்நுட்பம், படத்தின் இரண்டாம் பாதியில் பெண்கள் சண்டை போட்டது என பாராட்ட பல உள்ளது. ஆனால் முதல் அரைமணி நேரத்தினை மட்டுமே கொண்டு முழுப் படத்தினையும் எடைபோடுவது என்பது ஏமாற்றம் அளிக்கின்றது. ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகடிவ் விமர்சனங்கள் உண்மையாலுமே எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கின்றன. குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்களுக்கும், பெண்கள் பின்னால் கதாநாயகர்கள் சுற்றும் படங்களுக்கும், இரட்டை அர்த்த வசங்கள் பேசப்படும் படங்களுக்கு கூட இந்த அளவுக்கு நெகடிவ் விமர்சனம் கொடுக்கப்படவில்லை.
அட்வைஸ்: படக்குழு எடுத்துள்ள முயற்சிக்கு பாரட்டுகளையும் கைத்தட்டல்களையும் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அப்படி யாரும் படக்குழுவினரைப் பாராட்டவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கங்குவா டீம் கொஞ்சம் பொருமையாக இருங்கள். நெகடிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதுவும் செய்யாதவர்கள்" எனத் தெரிவித்தார்.
காரணம்: ஜோதிகா தனது பதிவில் படத்தின் அனைத்தையும் பாராட்டிவிட்டு, முதல் 30 நிமிடங்களை மட்டும் ஏன் வொர்க் அவுட் ஆகவில்லை எனக் கூறினார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தில் திஷா பதானி இருக்கின்றார். திஷா பதானி வரும் காட்சிகள் மட்டும் இன்றி திஷா பதானியை ஜோவுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. அதனால்தான் கங்குவா இசை வெளியீட்டுவிழாவிற்கு கூட வரவில்லை எனவும் கூறப்படுகின்றது. மேலும் படத்தின் பல ப்ரோமோசன் மேடைகளில் தீஷா பதானியின் அருகில் அமர்வதைக் கூட சூர்யா தவிர்க்க இதுதான் காரணமா என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications










