twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெயர்: காதலுக்கு மரியாதை! வயது 25! குற்றம்: இதயங்களை திருடியது! "மீண்டு" வருவாரா ஜீவா?

    |

    சென்னை: 1997ஆம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதி உலகம் முழுக்க உள்ள காதலர்களின் வாழ்க்கை தருணத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மாறும் என்று அன்று காலை வரை கூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

    ஹாலிவுட்டில் டைட்டானிக், தமிழில் காதலுக்கு மரியாதை என்ற இரு பெரும் காதல் காவியங்கள் பிறந்த தினம் யதேர்ச்சையாக அன்றாகத்தான் இருந்தது.

    உலகம் முழுவதும் காதலர்களின் இதயத்தை உருக்கி, நொறுக்கி போட்டது டைட்டானிக் என்றால், உள்ளூர் காதலர்களின் உள்ளத்தை நெகிழ்ந்துபோக வைத்தது காதலுக்கு மரியாதை.

    பாசில் இயக்கத்தில், விஜய், ஷாலினி, சிவகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், சார்லி, ராதாரவி, தாமு, தலைவாசல் விஜய், கே.பி.ஏ.சி. லலிதா என பெரும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பு (kadhalukku mariyadhai cast and crew) என்ற கேக்கின் மீது, இசைஞானி இளையராஜா இசை என்ற செர்ரி வைக்கப்பட்ட படம் என்பதால் வெளியாகும்போதே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது இந்த படம்.

     ரஜினி, கமல் பெயர் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்... சிவாஜிக்கு மரியாதை இல்லை: இளையராஜா ஓப்பன் டாக் ரஜினி, கமல் பெயர் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்... சிவாஜிக்கு மரியாதை இல்லை: இளையராஜா ஓப்பன் டாக்

    இளையராஜா பாடல்கள்

    இளையராஜா பாடல்கள்

    "என்னை தாலாட்ட வருவாயா.." "ஒருபட்டாம் பூச்சி.." "ஓ பேபி பேபி.." "ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு.." (kadhalukku mariyadhai songs) என பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, கேசட்கள் விற்பனை உச்சம் தொட்டு, பெரும் ஹைப்பை படத்திற்கு ஏற்படுத்தியிருந்தது. அதே வருடத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த லவ் டுடே திரைப்படம் பெற்ற வெற்றி விஜய் படத்திற்கு காதலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த காலகட்டம் அது. படமும் வெளியானது.. தியேட்டர்கள் நிரம்பி வழியத் தொடங்கின.. இன்று வரை விஜய் திரைப்பட உலகின் மைல்கல் படங்களில் அதி முக்கியமானதாகவும் மாறிவிட்டது காதலுக்கு மரியாதை. படத்தின் தலைப்புக்கு சரியாக பொருந்தும் வகையில் கிளைமேக்ஸ். எப்போடா மினியும், ஜீவாவும் ஒன்னா சேருவாங்க.. சேர்க்காமலே என்ட் கார்டு போட்டா என்ன பண்றது என்ற பதைபதைப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் கூட இருப்பதுதான் சக்சஸ் சீக்ரெட்.

    காதலர்களின் புனித நூல்

    காதலர்களின் புனித நூல்

    மினி அம்மா, ஜீவா அம்மாவிடம் பேசும் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து விட்டு ரசிகர்கள் விட்ட பெருமூச்சால் உருவான பெரும் காற்றால், பல தியேட்டர்களில் மின் விசிறியை கூட ஆப் செய்துவிட்டதாக நகைச்சுவையாக கூறுவார்கள். ஏதோ நமது காதலே சக்சஸ் ஆகிவிட்டதை போல குதூகலத்தோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தனர் 80ஸ்களில் பிறந்த 90ஸ் கிட்ஸ்கள். இந்த படத்தில் ஒரு ஐகானிக் காட்சி உண்டு. விஜய்யும், ஷாலினியும் நூலகம் ஒன்றில், Love and love only என்ற ஒரே புத்தகத்தை இருபக்கத்திலும் நின்றபடி இழுப்பார்கள். அவர்களது மனது எப்படிப்பட்டது என்பதை ஒற்றை பிரேமில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாசில். அந்த புத்தகம் அந்த காலகட்டத்தில் காதலர்களின் புனித நூலாக மாறியது. எங்கே கிடைக்கும், யார் எழுதியது என தேடி தேடி ஸ்மார்ட்போன் இல்லாத குறையை உணர்ந்தது இளம் தலைமுறை.

    யதார்த்த காதல்

    யதார்த்த காதல்

    ஒன்று, காதலர்கள் தற்கொலை செய்வார்கள்.. அல்லது, ஊரை விட்டு ஓடுவார்கள்.. சில நேரங்களில் ஒரே பாட்டில் பணக்காரர்களாக கூட மாறி பெற்றவர்கள் "முகத்தில் கரியை பூசுவார்கள்" என்ற டெம்ப்ளேட்டில் இயங்கிய தமிழ் சினிமாவில், யதார்த்த காதலை பிசகாமல், ஆபாசம் துளி கூட இல்லாமல் காட்டியிருப்பார் இயக்குநர். இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. மலையாள நேட்டிவ் இயக்குநர் என்பதாலேயே, படத்தின் ஓட்டம், மெல்லிய நீரோட்டம் போலதான் போகும். பெரிய அதிர்வுகளோ, எரிமலை வெடிப்புகளோ இருக்காது. ஒரு சில ரசிகர்களுக்கு அது பிடிக்காமலும் கூட இருந்திருக்கலாம். ஆனால் அதே ரசிகர்கள் இப்போது பார்த்தாலும் காதலுக்கு மரியாதை, அவர்களின் மனதிற்கு நெருக்கமான படமாக மாறிவிடுகிறது என்பதுதான், 25 வருடங்கள் கழித்தும் அப்படத்தை பற்றி நாம் பேச காரணம். பக்கத்து வீட்டு பையன், பக்கத்து வீட்டு பொண்ணு என்ற பாவனையில் கச்சிதமாக பொருந்திப்போன விஜய்யும், ஷாலினியும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இன்றும் ராஜா, ராணியாக வீற்றிருக்கிறார்கள்.

    மீண்டு(ம்) வருவாரா விஜய்

    மீண்டு(ம்) வருவாரா விஜய்

    2000த்திற்கு பிறகு தமிழ் திரை நாயகர்கள் ஆக்ஷனை நோக்கி நகர்ந்தனர். அஜீத்தின் தீனா, விஜய்யின் திருமலை போன்றவை அவர்களை அடுத்தகட்டம் கொண்டு சென்றன. பேரரசுவின் தொடர் ஆக்ஷன் பட வெற்றிகள் விஜய்யை அந்த மாய வலைக்குள்ளேயே இன்னும் வைத்துள்ளது. 90களின் மற்றொரு பெரிய ஸ்டாரான பிரசாந்த் சறுக்கியது கூட ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுக்காமல் காதலை சுற்றி வந்ததால்தான் என்பது விமர்சகர்கள் பார்வை. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. மறுபடியும் காதலுக்கான தேவை கூடிவிட்டது. துளி ஆக்ஷன் இல்லாத புதிய லவ் டுடே, மென்மையான காதலை கடத்திய துல்கர் சல்மானின் சீதா ராமம் பெரும் வெற்றி பெற்று அதை புடம்போட்டு காட்டுகின்றன. ஆனால் ஆக்ஷன் படங்களான பீஸ்ட்டும், வலிமையும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லையே.. எனவே காதலுக்கு மரியாதை விஜய் மீண்டும் வருவாரா, மறுபடி அவ்வப்போது மென்மையான காதல் படங்களால் இளம் நெஞ்சங்களை கட்டிப்போடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியுள்ளது காதலுக்கு மரியாதையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா.

    English summary
    Kadhalukku Mariyadhai at 25th years, and here is the review: Until that morning in 1997, no one would have thought that December 19th would become a day to be etched in golden letters in the lives of lovers around the world. Coincidentally, the birth date of two great romantic epic movies, Titanic in Hollywood and Kadhalukku Mariyadhai in Tamil, happened to be on that day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X