குளிப்பதை பார்த்த அமுதவாணன்..தட்டிக் கேட்காத கமல்..என்னங்க சார் உங்க சட்டம்..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : குளிப்பதை ஓட்டை வழியாக பார்த்த அமுதவாணனை கமல் தட்டிக் கேட்காதது ஏன் என பிக் பாஸ் பிரியர்கள் இணையத்தில் விளாசி வருகின்றனர்.
விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியன்களில் அமுதவாணன் முக்கியமானவர். இவர் இல்லாமல், எந்த காமெடி நிகழ்ச்சியும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சரக்கு உள்ள ஒரு முக்கியமான ஆள்.
அமுதவாணன் பிக் பாஸ் வந்த இரண்டுவாரம், அனைவர் இடத்திலும் கலகலப்பாக சிரித்து சிரித்து பேசினார். ஆனால், கடந்த சில வாரங்களாக தனலட்சுமி ,ஜனனி என தனக்கு என்று ஒரு குரூப்பை சேர்த்துக்கொண்டு விளையாடி வருகிறார்.

குளிப்பதை பார்த்த அமுதவாணன்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது, யாராவது வருகிறார்களா? இல்லையா? என்பதை சுற்றி முற்றி பார்த்துவிட்டு,கதவின் இடுக்கு வழியாக அவர்கள் குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்தார். அமுதவாணன் இவ்வளவு அசிங்கமாக நடந்து கொண்ட போதும் பிக்பாஸ், அமுதவாணன் மைக்கை மாட்டுங்கள் என்று மட்டுமே எச்சரித்தார்.

வீடியோ தீயாக பரவியது
இதனால் பதறிப்போன அமுதவாணன் மைக்கை மாட்டிக் கொண்டு பாத் ரூமிலிருந்து ஓட்டம் பிடித்தார். அமுதவாணன் வீட்டில் மோசமாக நடந்து கொண்டது, விஜய்டிவியில் ஒளிபரப்பான ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகவில்லை, அதை எடிட் செய்து ஒளிபரப்பினார்கள். ஆனால், 24 மணி நேரலையில் இந்த வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக்கினார்கள்.

வெளியில் அனுப்பவேண்டும்
பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அமுதவாணனை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும், அப்போது தான் பெண்களை தவறான எண்ணத்தில் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை சோஷியல் மீடியாவில் கொட்டி தீர்த்து, கமலுக்காக காத்திருந்தனர்.

என்னங்க சார் உங்க சட்டம்
ஆனால், கமல்ஹாசனோ அமுதவாணன் மோசமாக நடந்து கொண்டது பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. கேள்வி பதில் டாஸ்கில், பிக் பாஸ் வீட்டில் பேசுவது போல, தனலட்சுமி வெளியில் பேசினால், பளார் என்று அடிவாங்குவார் என்ற கேள்வியே வன்மையாக கண்டித்த கமல், பெண்களை அடிப்பது என்பது சரியானது அல்ல, இந்த கேள்வி இங்கு வந்திருக்கக்கூடாது என வியாக்கானம் பேசிய கமல், அசிங்கமாக, அநாகரீகமாக நடந்து கொண்ட அமுதவாணனை கண்டுக்கொள்ளாதது ஏன்? என்னங்க சார் உங்க சட்டம் என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











