»   »  சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார் கமல்.. ஏன்?

சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார் கமல்.. ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்த கமல் ஹாஸன் தனது சீகட்டி ராஜ்ஜியம் (தெலுங்கு தூங்கா வனம்) படத்தைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். விஜயவாடாவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.


Why Kamal meets Chandrababu Naidu?

இச் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை நிர்மாணம் செய்யும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலாததற்கு கமல்.


மேலும், சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதியில் தனி திரைப்படத் துறையை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.


Why Kamal meets Chandrababu Naidu?

தெலுங்கில் வெளியாகவுள்ள தனது சீகட்டி ராஜ்ஜியம் பட சிறப்புக் காட்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார் கமல். அதனை சந்திரபாபு நாயுடுவும் ஏற்றுக் கொண்டதாக கமல் தெரிவித்துள்ளார்.


இதே போல தனிக் காட்சி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதிலும் நடக்கும் என்று அதற்கு தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார்.

English summary
Actor Kamal Hassan recently met Andhra Chief Minister Chandrababu Naidu and invited him to watch his Seegatti Rajjiyam premiere.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil