Just In
- 7 hrs ago
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- 7 hrs ago
ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!
- 8 hrs ago
ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா? சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்!
- 9 hrs ago
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
Don't Miss!
- Technology
டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திரும்பவும் சந்திக்க வைத்த பிக் பாஸ்.. பிரேக்கப்பை உறுதி செய்த கவின்-லாஸ்.. சோகத்தில் கவிலியா ஆர்மி!
சென்னை: கவின் லாஸ்லியா காதல் பிரிவிற்கு காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு சீசன்களைவிட இந்த சீசனில் கவின், லாஸ்லியா காதல் பெரிதும் பேசப்பட்டது. கவின், லாஸ்லியா இல்லாத புரொமோக்களை கூட மக்கள் ரசிக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
இதனால் கவின் லாஸ்லியா காதலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது இருவரது பெயரையும் சேர்த்து கவிலியா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆர்மிக்களும் தொடங்கப்பட்டன.

கவினின் முடிவு
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது, கவின் திடீரென பிக் பாஸ் தந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அப்போது லாஸ்லியா கதறி அழுதது, சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
மீண்டும் சிறப்பு விருந்தினராக கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது, திரும்பவும் காதல் காட்சிகள் களைக்கட்டியது. இதனால் எப்படியும் வெளியில் வந்ததும், முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த ஜோடியாவது காதலை தொடர்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

குழம்பிய ரசிகர்கள்
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், இருவரும் சந்தித்து கொண்டதாகவே தெரியவில்லை. தங்கள் காதல் பற்றியும் அவர்கள் காட்டிக்கொள்ளவே இல்லை. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இருவரும் பேசவில்லை
பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது கூட இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. இதனால் அவர்களது காதல் முறிந்துவிட்டதோ என்ற குழப்பத்தில் கவிலியா ஆர்மி ஆளாகினர்.

ஓரே நிற ஆடை
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் சக்சஸ் பார்ட்டி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் லாஸ்லியாவும், கவினும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ரசிகர்கள் ஏமாற்றம்
இன்னும் அவர்களுக்குள் காதல் இருக்கிறது என சமூக வலைதளங்களில் கவிலியா ஆர்மியினர் பதிவிட்டு வந்தனர். ஆனால் இம்முறையும் அவர்களது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இந்த நிகழ்ச்சியிலும் இருவரும் சோகமாகவே காட்சியளித்தனர். அதோடு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதாகவும் தெரியவில்லை. இருவரும் இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

காதல் முறிவு
இதன் மூலம் அவர்களது காதல் முறிவு உண்மை தான் என்பது தெரியவந்தது. அவர்களது காதல் முறிவிற்கு லாஸ்லியாவின் பெற்றோர் தான் காரணம் என சமூல வலைதளங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக லாஸ்லியா குடும்பத்தினர் வந்திருந்த போது, கவின் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி லாஸ்லியாவிற்கு அவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

உண்மை என்ன?
தற்போது லாஸ்லியாவின் மனதை அவர்கள் முழுவதுமாகவே மாற்றிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கவினோ, லாஸ்லியாவோ வாய் திறந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.