Diwali 2024: தீபாவளி ரிலீஸ்களுக்கு அவ்வளவுதான் மவுசா? பெரிய நடிகர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

சென்னை: இந்தியத் திரையுலகினைப் பொறுத்தவரையில் விழாக்கால விடுமுறை தினங்கள் என்பது, மிகப்பெரிய அறுவடைக் காலங்கள்தான். ஒருபடத்தினை சாதாரண வார இறுதி நாட்களில் ரிலீஸ் செய்வதைவிடவும், விழாக்காலங்களில் ரிலீஸ் செய்தால் வசூல் என்பது வார இறுதி நாள் ரிலீஸ் வசூலை விட அதிகமாக இருக்கும். இதனால் வருடத்தில் இருக்கக்கூடிய, விழாக்காலங்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள்தான் எப்போதும் ரிலீஸ் ஆகும். இப்படியான நிலையில் தமிழ்த்திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு போக்கு நீடித்து வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

அதாவது, ஏற்கனவே குறிப்பிட்டத்தைப்போல், விழாக் காலங்களில் பெரிய நடிகர்களின் படங்களே சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ரிலீஸ் ஆகிக் கொண்டு இருந்தது. இதில் தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில், பொங்கல் மற்றும் தீபாவளி ரிலீஸ்களுக்கு பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். இப்படியான நிலையில், தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே, பெரிய நடிகர்கள் தீபாவளியைக் கண்டுக்கொள்வதில்லை. அதேநேரத்தில் பொங்கலுக்கு தங்களது படங்களை ரிலீஸ் செய்ய பெரிய நடிகர்கள் தொடங்கி, பெரிய பேனர்கள் வரை தீவிர முயற்சியில் உள்ளனர்.

diwali 2024 kollywood 2024

அதாவது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நடிகர்கள் என்றால், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இதில் கமல் மற்றும் விக்ரம் படங்கள் எப்போதும் கமர்ஷியல் படங்களாக மட்டுமே இருப்பதில்லை. இதனால் இவர்களை அந்த லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட்டாலும் கூட, ரஜினி, விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் யாருக்குமே தீபாவளி தினத்தில் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதைக் காட்டிலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவே அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

diwali 2024 kollywood 2024

பொங்கல்: இதற்கான காரணம் என திரைத்துறை வட்டாரங்களில் அடிபடும் பேச்சுதான் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றது. தீபாவளி என்பது ஒருநாள் பண்டிகை. இது வார இறுதி நாட்களுடன் வந்தாலும் படத்தின் ஏகபோக வசூல் என்பது மூன்று நாட்களில் இருந்து அதிகபட்சம் நான்கு நாட்கள் வரையில்தான் இருக்கும். ஆனால் அதுவே, பொங்கலுக்கு படத்தினை ரிலீஸ் செய்தால், பொங்கலுக்கு விடுமுறையே குறைந்தபட்சம் 3 நாட்கள் உள்ளது. இது இல்லாமல் வார இறுதி நாட்களையும் சேர்க்கும்போது, படத்தில் ஏகபோக வசூல் என்பது குறைந்தபட்சம் நான்கு நாட்களில் இருந்து ஆறு நாட்கள் வரை இருக்கும்.

diwali 2024 kollywood 2024

தீபாவளி: இதனை மனதில் வைத்துத்தான், பெரிய நட்சத்திரங்கள் தீபாவளியைக் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே பொங்குலுக்கு வந்தோமோ கல்லாப் பெட்டியை நிரப்பினோமா என பெரிய நடிகர்கள் இருக்கின்றார்களாம். அதேநேரத்தில், தீபாவளி ரிலீஸ் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பது இன்னும் குறையவில்லை. இதனைப் பயன்படுத்தித்தான் வளர்ந்து வரும் நடிகர்கள் தீபாவளிக்கு தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றார்களாம். கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய நடிகர்கள் பொங்களுக்குத்தான் படங்களை ரிலீஸ் செய்கின்றார்கள். மேலும் தீபாவளி மாதத்தில் கூட படத்தினை ரிலீஸ் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் தீபாவளியை சீண்டுவதில்லை. கடந்த ஆண்டு லியோவும் இந்த ஆண்டு வேட்டையனும் அப்படித்தான் ரிலீஸ் ஆகியுள்ளது. வேட்டையன் ரிலீஸினால் தள்ளிப்போன கங்குவா தீபாவளியை விட்டுவிட்டு, நவம்பர் 14இல் ரிலீஸ் ஆகவுள்ளது.

diwali 2024 kollywood 2024

ஆரோக்கியம்: மேலும், இது ஒரு நல்ல விஷயம்தான் எனவும் கூறப்படுகின்றது. காரணம் எல்லா விழாக்காலங்களையும் பெரிய நடிகர்களே ஆக்கிரமித்துவிட்டால், அடுத்த தலைமுறை நடிகர்களுக்கான இடம் என்பது கிடைக்காமலே போய்விடும். தீபாவளி போன்ற ரசிகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பலரது கவனத்தினை ஈர்ப்பது மட்டும் இல்லாமல், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று தங்களுக்கான இடத்தினை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொள்வது மட்டும் இல்லாமல், மினிமம் கேரண்டி வசூலையும் கொடுத்து விடுகின்றனர். இதனை, ஆரோக்கியமான போக்கு என பல சினிமா விமர்சகர்களும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X