Dhanush : தனுஷ்ஷை மேடையிலேயே அடித்த KS ரவிக்குமார்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் வியாழன் அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மமிதா பைஜு, KS ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் KS ரவிக்குமார் மேடையிலேயே தனுஷ்ஷை அடித்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது, " ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று இருந்துள்ளது. அப்படி தனுஷ்க்கு போட்டி நடிகர் யார் என்று KS ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு, அப்படி எல்லாம் யாரும் இல்லை, நான் எனக்கென தனி ரூட்டில் சென்று கொண்டு இருக்கிறேன். நான் நேற்று நன்றாக நடித்ததை விடவும் இன்று நன்றாக நடிக்க வேண்டும், நேற்று ஈட்டிய வசூலை விடவும் நன்றாக வசூலை ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் என பதில் அளித்தார். தனுஷ்ஷின் இந்த பதிலைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தனுஷ்ஷைப் பாராட்டி வருகிறார்கள்.

கே.எஸ். ரவிக்குமார் கேள்வி: அதேபோல், உலகநாயகன் கமல்ஹாசன் சார் தன்னை கமல்ஹாசன் என்று அழையுங்கள் போதும் என்கிறார், அல்டிமேட் ஸ்டார் அஜித், தன்னை அஜித் குமார் என்று அழையுங்கள் போதும் என்கிறார். உங்களை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் உங்களுக்கு 'கலை அசுரன்' என்று பெயர் கொடுத்தார். அப்படி உங்களை அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா? அசுரன் என்று சொன்னால் ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டார்.
அடிவாங்கிய தனுஷ்: அதற்கு தனுஷ், " அசுரன் நான் நடித்த படம் தான், ஆனால் என்னை தனுஷ் என்றே அழைத்தால் போதும்" என்று பதில் அளித்தார். இவரது இந்த பதிலைக் கேட்டதுமே KS ரவிக்குமார் உன்னை எதில் அடிப்பது என்று தெரியவில்லை என்று கூறி, மேடையில் கீழே கிடந்த பூக்களை அள்ளி அவரை நோக்கி வீசினார். உடனே தனுஷ்ஷோ சார் நீங்க என்னை அடித்தது கூட வாழ்த்தாகத்தான் விழுகிறது என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். அதற்கு KS ரவிக்குமாரோ நீ நல்லா இருக்க வேண்டும் என்றுதான் பூவாலே அடித்தேன்" என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications