Leo Tickets: சென்னையில் பல தியேட்டர்களில் லியோ டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்க இதுதான் காரணமா?
சென்னை: மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், நேற்று புக் மை ஷோவில் சில திரையரங்குகளில் மட்டுமே லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமானது.

ஆனால் பல மணி நேரங்கள் ஆகியும், சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் இருக்க என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில பஞ்சாயத்துகள் தான் அதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.
வித்தியாசமான விஜய்: இதுவரை தான் நடித்தது போல இல்லாமல் புதுசா முயற்சித்து பார்க்க வேண்டும் என்கிற முடிவுடன் தான் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜை இயக்க அழைத்தார் என லோகி பேட்டிகளில் கூறி வருகிறார். வித்தியாசமான ஹேர்ஸ்டைல் லுக்கில் பார்த்திபன் விஜய்யாக நடிகர் விஜய் நடித்து இருப்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். படத்தின் டைட்டில் லியோ என இருப்பதால் ஒரே ஒரு விஜய் தான் என்றும் லியோ தாஸ் சத்யா மீது கொண்ட காதல் காரணமாக பார்த்திபன் ஆக வாழ்ந்து வருகிறார் என்றும் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவல் என்றால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தமிழ்நாட்டில் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினமே லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. சென்னையில் நேற்று புக் மை ஷோ உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் நேரடியாக கவுண்ட்டர்கள் மூலமாகவும் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளன.
பல திரையரங்குகளில் தொடங்கவில்லை: ஆனால், படம் வெளியீட்டுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் ஏன் தொடங்கவில்லை என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன. மேலும், சில அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகி உள்ளன. புக் மை ஷோவில் ஒரு மில்லியன் ரசிகர்கள் லைக் போட்டுள்ள நிலையில், இன்னமும் அதிகப்படியான தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருப்பது ரசிகர்களை கடுப்பாகி வருகிறது.

இதுதான் காரணமா?: திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லியோ படத்தின் விநியோகஸ்தர்கள் இடையே ஷேர் பங்கீடு தொடர்பாக இழுபறி நிலவி வரும் நிலையில் அதன் காரணமாகத்தான் சென்னையில் உள்ள பல முன்னணி திரையரங்குகள் இன்னமும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கவில்லை என ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை அல்லது நாளை லியோ டிக்கெட் முன்பதிவு சென்னையில் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











