Leo Trailer: லியோ டிரெய்லர்.. என்ன ஒரே மயான அமைதியா இருக்கே.. கடைசி நேரத்தில் அந்த பஞ்சாயத்தா?
சென்னை: Leo Trailer - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இன்று காலை த்ரிஷா போஸ்டர் வெளியிட்டு பில்டப் செய்யப்பட்ட நிலையில், டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை இன்னும் சொல்லாமல் தயாரிப்பு நிறுவனம் மெளனம் காக்கிறது.
சன் டிவி யூடியூப் சேனலில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ரிலீஸ் டைம் சொல்லவே இல்லை.

லியோ சென்சார் சான்றிதழ் என ஒன்று வலம் வந்ததே அதில் ஏகப்பட்ட ஆபாச வசனங்கள் மியூட் செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், டிரெய்லரில் மியூட் செய்யப்படாமல் ஆபாச வசனங்கள் மாஸ்டர், விக்ரம் படங்களில் இருந்தது போல இருப்பதால் ரீ எடிட் செய்யப்பட்டு வருகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், லியோ படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டு வருகிறதா? என்கிற கேள்வியையும் சினிமா வட்டாரத்தில் சிலர் எழுப்பி உள்ளனர்.
நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் பஞ்சாயத்து எல்லாம் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்ட நிலையில், லியோ படத்தின் டிரெய்லர் ரிலீஸை அதிரடியாக வெளியிடுவார்களா? அல்லது நேரத்தை விரைவில் அறிவிப்பார்களா என வெயிட் பண்ணிப் பார்ப்போம். இந்தி டிரெய்லர் 7 மணிக்கு ரிலீஸ் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











