விஜய்க்கு விழ வேண்டிய வாக்கு மிஸ்.. லோகேஷ் கனகராஜ் ஓட்டு போடாததற்கு காரணம்.. ஓபனாக சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குநராக இருக்கிறார். வரிசையாக ஹிட் கொடுத்த அவர்; லியோ, கூலி திரைப்படங்களில் மொத்தமாக சொதப்ப; அவரை வெளுக்க தொடங்கிவிட்டார்கள். அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் வாக்களிக்க முடியாதது பற்றி இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி ஓபனாக பேசியிருக்கிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் நான்கு படங்களுமே ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதன் காரணமாக அவரது மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என அனைவருமே ஆசைப்பட்டார்கள். ரஜினிக்குகூட அந்த ஆசை வந்துதான் கூலி திரைப்படத்தில் கமிட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் அறிமுகமான சில காலத்திலேயே பல கோடிகளை லோகி சம்பளமாக பெற தொடங்கினார்.

Why Lokesh Kanagaraj Didn t Vote RJ Balaji Reveals Airport Incident
Photo Credit:

லோகியின் ஸ்பெஷல்: லோகேஷ் கனகராஜின் கதைக்களங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும்; அதில் தன்னால் முடிந்த அளவுக்கு வித்தியாசத்தை காண்பிக்க மெனக்கெடுபவர். மேலும் எல்சியூ, அவர் பயன்படுத்தும் ரெட்ரோ பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவருக்கு பிறகுதான் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் பழைய பாடல்களை அதிகம் பயன்படுத்த தொடங்கினார்கள். இப்போது அது தமிழ் சினிமாவில் ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அவரது படங்களில் அதீதமான வன்முறையும், போதை பொருள் பற்றியும் இருப்பதாகவும் ஒரு விமர்சனமும் உண்டு.

லியோ, கூலி சொதப்பல்: இருந்தாலும் அவரது மார்க்கெட் விக்ரம் படம் வரை அசையாமல்தான் இருந்தது. அடுத்ததாக அவர் இயக்கிய லியோ படம் கொஞ்சம் தடுமாறி தோல்வியை சந்தித்தது. நிச்சயம் ரஜினியை வைத்து இயக்கும் கூலி படத்தில் தன் தவறுகளையும், தடுமாற்றங்களையும் சரி செய்திருப்பார் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ கூலி படத்தை உச்சக்கட்டமாக சொதப்பி வைத்திருந்தார். ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகளை சொல்லி படத்தை அடித்து துவைத்துவிட்டார்கள் ரசிகர்கள். லோகேஷின் மார்க்கெட்டே கூட தடுமாறிவிட்டது என்பதுதான் உண்மை.

ஹீரோவாக லோகேஷ்: அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது. சூழல் இப்படி இருக்க நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை. விஜய்யின் தீவிரமான ரசிகராகவும்; அவரது அபிமானியாகவும் இருக்கும் லோகி இப்படி வாக்களிக்காமல் விட்டுட்டாரே என்று விமர்சனங்களும் எழுந்தன.

ஆர்.ஜே.பாலாஜி பேச்சு: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி 29 பட விழாவில் கலந்துகொண்டார். அதில் லோகேஷும் வந்திருந்தார். அப்போது பேசிய பாலாஜி, "லோகேஷ் கனகராஜ் அவ்வளவு கலையாக இருப்பார். இப்போது அவரது முகத்தை தேட வேண்டியதாகிவிட்டது. அருண் மாதேஸ்வரன் பட ஷூட்டிங்தான் முடிந்துவிட்டதே. நீங்கள் ஷேவ் செய்ய வேண்டியதுதானே. பேட்ச் ஒர்க் எதுவும் இருக்கிறதா?. அவர் சினிமாவின் ஜீனியஸ் நீங்கள் இல்லாமலேயே பேட்ச் ஒர்க் செய்வார்.

ஏன் வாக்களிக்கவில்லை?: நான் வாக்களித்துவிட்டு மும்பைக்கு கிரிக்கெட் கமெண்ட்ரி செய்வதற்காக சென்னையிலிருந்து போனேன். அப்போது லோகேஷ் ஒரு வேலையை முடித்துவிட்டு வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து கோவை செல்ல விமான நிலையம் வந்தார். ஆனால் கேட் மூடப்பட்டுவிட்டதால் விமானத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதனால்தான் அவரால் வாக்களிக்க முடியவில்லை. இந்த உண்மையை வெளியே சொன்னதற்காகவே அவர் சீக்கிரம் தாடியை ஷேவ் செய்ய வேண்டும்" என்றார். இதை பார்த்த ரசிகர்களோ, கண்டிப்பாக விஜய் அண்ணாவுக்குதான் லோகி அண்ணா வாக்களித்திருப்பார். ச்ச அது மிஸ் ஆகிவிட்டதே என்று கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X