பிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு!
பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் காட்சிகள் இடம்பெற்றது எடிட்டிங்கில் நடந்த தவறு என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் காட்சிகள் இடம்பெற்றது எப்படி என்ற உண்மை தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றைய தினம் நடைபெற்ற கிராண்ட் பினாலேவில் சரவணன் மற்றும் மதுமிதாவை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஆனால், டிவியில் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியின் போது மதுமிதாவின் கணவர் மோசஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிக் பாஸ் பைனல்சில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுமிதாவே நிகழ்ச்சிக்கு வராத போது, அவரது குடும்பத்தினர் மட்டும் எப்படி பைனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பார்கள் என நெட்டிசன்கள் கொளுத்திப்போட்டனர்.

சர்ச்சை காட்சிகள்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. நிகழ்ச்சிக்கு தான் போகாதபோது, தன்னுடைய காட்சிகளை விஜய் தொலைக்காட்சி எப்படி காட்டலாம் என மதுமிதாவின் கணவர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மதுமிதா வருத்தம்
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மதுமிதா, "என்னை தரம் தாழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி செய்திருக்கிறார்கள். உண்மையில் இப்படி செய்ததினால் அவர்கள் தான் தரம்தாழ்ந்திருக்கிறார்கள். ஏன் இப்படி செய்தார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்", எனக் கூறி வருத்தப்பட்டார்.

காரணம் என்ன?
மதுமிதா கணவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பானது ஏன் என விஜய் தொலைக்காட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது அவர்கள் நம்மிடம் கூறியது என்னவென்றால், "மதுமிதா கணவரின் காட்சிகளை வேண்டுமென்றே, எந்த உள்நோக்கத்துடனும் ஒளிபரப்பவில்லை. அது எடிட்டிங்கில் நடந்த தவறு மட்டுமே.

பைனல்ஸ் படப்பிடிப்பு
பொதுவாக பைனல் நிகழ்ச்சி படம்பிடிக்கப்படும் போது ஒரேநாளில் எல்லாவற்றையும் எடுக்க முடியாது. எனவே பிரித்து பிரித்து தான் ஷூட் செய்வார்கள். கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் ஒரு நாளில் படம்பிடிக்கப்பட்டது. போட்டியாளர்களின் பெர்பாமன்ஸ், அதாவது அவர்கள் நடனம் ஆடும் காட்சிகள் எல்லாம் தனியாகத் தான் படமாக்கப்பட்டது.

பார்வையாளர்கள் காட்சிகள்
கமல் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தான் பார்வையாளர்களை அமர வைப்போம். ஆனால் போட்டியாளர்கள் நடனமாடும் போது எதிரே பார்வையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, ஏற்கனவே எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் இருக்கும் பார்வையாளர்களின் காட்சிகள், குறிப்பாக க்ளோசப் ரியாக்ஷன்கள் தனியே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.

எடிட்டிங் தவறு
பைனல்ஸ் நிகழ்ச்சி எடிட்டிங்கின் போது நடன நிகழ்வுகள் தனியே எடிட் செய்யப்பட்டது. பின்னர் மெயின் எபிசோடில் இடையிடையே சேர்க்கப்பட்டன. அப்படி சேர்க்கும் போது தான் மதுமிதா கணவரின் காட்சிகளும் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டன. மற்றபடி விஜய் டிவிக்கு மதுவை காயப்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை", என விவரம் சொல்கிறார்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு நெருக்கமானவர்கள்.


Click it and Unblock the Notifications











