மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்... தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இதுதான் காரணமாம்
Recommended Video
சென்னை: பொன்னியின் செல்வனின் ஷூட்டிங்கை தாய்லாந்தில் நடத்துவதற்கு காரணம் தெரிய வந்துள்ளது.
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், இதில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென விலகினார். ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்காக அவர், இதில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான்
படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டி பயிற்சி பெற்றுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது.

சரத்குமார்
இதற்கிடையே, இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் நீண்ட தாடி வளர்த்து வருகிறார். பொங்கலுக்குப் பின் இந்த ஷூட்டிங்கில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

ஏன் தாய்லாந்து?
இந்நிலையில் இந்தப் படத்தின் தாய்லாந்தில் நடத்த காரணம் தெரியவந்துள்ளது. இதுபற்றி படக்குழு கூறும்போது, இந்தப் படத்துக்காக ஏராளமான கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும். தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.

கோயில்கள்
அதனால்தான் தாய்லாந்தை இயக்குனர் தேர்வு செய்தார். அங்குள்ள கோயில்களுக்கும் நமது கோயில்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதால்தான் இந்த முடிவை இயக்குனர் மணிரத்னம் எடுத்தார் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











