மாஸ்டர் படத்தின் அந்தக் காட்சி நீக்கப்பட்டதற்கு காரணம் நானா? மனம் திறந்த நடிகை கவுரி கிஷன்!
சென்னை: மாஸ்டர் படத்தல் பெண்களின் ஆடைகள் குறித்து பேசப்படும் அந்த காட்சி நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அதில் நடித்திருந்த கவுரி கிஷன் மனம் திறந்து பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இந்தப் படத்தல் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் ரிலீஸ் ஆனது. கடந்த 13ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அமேஸான் ப்ரைம்
வசூலையும் குவித்தது. தொடர்ந்து ஓடிடி தளத்திலும் இப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அமேஸான் ப்ரைம் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

பெண்களின் உடை..
அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்று கூறுபவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படத்தில் பேராசிரியராக நடித்திருக்கும் விஜய் பேசியிருப்பார்.

நடிகை சிரித்ததுதான் காரணம்?
இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு காட்சியை ஏன் படத்திலிருந்து நீக்கினீர்கள் என்று பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த சீரியஸான காட்சியில் நடித்த நடிகை கவுரி கிஷன் சிரித்ததுதான் காரணம் என பேச்சு எழுந்தது.

கவுரி கிஷன் விளக்கம்
விஜய் சீரியஸாக பேசும் போது சவிதாவாக நடித்திருந்த கவுரி கிஷன் சிரிப்பதால் தான் அந்த காட்சி டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து பேசியுள்ளார் அந்த காட்சியில் சவிதாவாக நடித்திருந்த கவுரி கிஷன்.

டீசரில் இடம்பெறவில்லை
இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கவுரி கிஷன், "என்னைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவை மதிக்கிறேன். கதைக்கு தேவைப்பட்டிருந்தால் அதை வைத்திருப்பார். டீசரில் அந்தக் காட்சி இடம்பெற்றிருக்கும். படத்தில் இடம்பெறவில்லை.

உண்மை இல்லை
ஆனால் அமேசான் ப்ரைம் அந்த வீடியோவை வெளியிட்ட போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்தக்காட்சி வெளியிட்ட பின்னர் நான் சிரித்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதனால் தான் அந்த சீன் நீக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்றே நினைக்கிறேன்.

டப் செய்திருக்க மாட்டார்கள்
சில கோணங்களில் பார்க்கும் போது நான் சிரிப்பது போல் தவறாக தெரிந்திருக்கும். அந்தக் காட்சி தவறாக, நான் சிரிப்பது போல் இருந்திருந்தால் அதற்கு பின்னணி குரல் கொடுத்து டப் செய்திருக்க மாட்டார்கள். எடிட்டிங்கில் அந்த சீன் இருந்தது" என கவுரி கிஷன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











