முழுக்க முழுக்க இங்கிலிஷ்.. குட்டி ஸ்டோரி பாடல் இப்படி இருக்க காரணம் என்ன தெரியுமா.. பரபர பின்னணி!
Recommended Video
சென்னை: குட்டி ஸ்டோரி பாடல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக பார்க்கப்படுகிறார் நடிகர் விஜய். தனது படங்களில் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதனாலேயே விஜயின் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு எழுந்து விடுகிறது. இதேபோல் ஏதாவது மேடை நிகழ்ச்சி என்றாலும் பரபரப்பாக பேசி ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்று விடுகிறார் நடிகர் விஜய்.

மாஸ்டர் படம்
இந்நிலையில் நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஷாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

அருண்ராஜா காமராஜ்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தைகளே இந்த படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்த பாடலை, கனா படத்தின் இயக்குநரும் நெருப்புடா நெருங்குடா பாடலை பாடியவருமான அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்.

பணவீக்கம் வேலையின்மை
இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜயே தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார். இந்த பாடல் வேற்று மொழியினருக்கும் அதிகம் புரியும் வகையில் ஆங்கில மொழி வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 5 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தப் பாடலில் பணவீக்கம், வன்முறை, வேலையில்லா திண்டாட்டம் என அனைத்தையும் தொட்டிருக்கிறார்.

தலையில் காவி
இந்த பாடலில் ஹேட்டர்ஸ் என வரும் இடங்களில் எல்லாம் தலையில் காவி நிறம் பூசப்பட்ட கார்ட்டூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வட மாநிலங்களிலும் இந்த பாடலை புரமோட் செய்யும் வகையில் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் பாஜக அரசின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இதுவே முதல் முறை
இந்தப் பாடலில் 3000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற லிரிக்கள் வீடியோ வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவிலேயே குறிப்பாக கோலிவுட்டில் இப்படி ஒரு பாடல் வெளியாவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











