Don't Miss!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
KGF, புஷ்பா, RRR பத்தி பேசுறப்ப, ஏன் அந்த தமிழ்ப் படத்த பத்தி பேசல..? நடிகர் கிஷோரின் ஆதங்கம்
சென்னை: பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகர்தான் கிஷோர். அதற்கு முன் தாய்மொழி கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், வெற்றிமாறனின் துணை இயக்குநர் மூலம்தான் பொல்லாதவன் திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.
முதல் படத்திலேயே யார் இந்த நடிகன் என்று திரும்பிப் பார்க்க வைத்தவர். கன்னட சினிமாவிலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜிற்குப் பிறகு நல்ல ஒரு குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர்.
தற்சமயம் இயக்குநர் மணிரத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள கிஷோர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
’அவன் இவன்’ புகழ் குணசித்திர நடிகர் ராமராஜ் காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!

வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறனின் முதல் படத்தில் தொடங்கி, அசுரன் திரைப்படத்தை தவிர்த்து அனைத்து படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் கிஷோர். ஆடுகளம் திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தில் தனுஷ் நடித்திருந்த கதாப்பாத்திரம் உள்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் grey shade கொண்டதாகவும். கிஷோர் நடித்திருந்த ரோல்தான் grey shade குறைவாக உள்ள பாஸிட்டிவ் கதாப்பாத்திரம் என்றும் வெற்றிமாறன் அப்போது கூறியிருந்தார்.

விவசாயம்
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தனது இடத்தில் அனைத்து வகையான கீரைகள், பழங்கள், காய்கள் என பல்வேறு தாவரங்களை வளர்த்து வருகிறார் கிஷோர். இவரின் தாக்கத்தால்தான் இயக்குநர் வெற்றிமாறனும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம்
சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில், KGF-2 திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைவரும் KGF-2, புஷ்பா, RRR திரைப்படங்களின் வெற்றியை பற்றி பேசுகிறீர்கள். இவை அனைத்தும் ஆக்ஷன் திரைப்படங்கள். ஆனால் ஜெய் பீம் என்ற தமிழ்ப் படத்தின் வெற்றியைப் பற்றி யாருமே பேசவில்லை. நிறைய இந்தி மீடியாக்களே அந்தப் படத்தை கொண்டாடிய நிலையில், அதன் வெற்றியைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
Recommended Video

இந்திய திரைப்படங்கள்
KGF-2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனைவரும் இந்தி திரைப்படங்களை கேலி செய்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. இந்தியிலும் அப்படியான திரைப்படங்கள் வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். அப்போதுதான் மொழிகள் தாண்டி அனைத்து துறையும் முன்னேறும் என்று கிஷோர் கூறியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் "She" என்ற இந்தி வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.