twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானே வருவேன் ஏன் பொன்னியின் செல்வனுடன் போட்டி, ஏன் ஆளவந்தானுடைய சாயல்... மனம் திறந்த செல்வராகவன்

    |

    சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் நானே வருவேன்.

    மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு இந்தத் திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில் இந்தப் படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

    நானே வருவேன்..தனுஷ் ஆபத்தான ஸ்கிரிப்ட் ரைட்டர்..செல்வராகவன் ஏன் அப்படி சொன்னார்!நானே வருவேன்..தனுஷ் ஆபத்தான ஸ்கிரிப்ட் ரைட்டர்..செல்வராகவன் ஏன் அப்படி சொன்னார்!

    வெற்றிக் கூட்டணிகள்

    வெற்றிக் கூட்டணிகள்

    இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியாகும் ஐந்தாவது திரைப்படம், தயாரிப்பாளர் தானு மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது திரைப்படம், நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம், தனுஷ் கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்ற பல வெற்றி அடையாளங்களுடன் நானே வருவேன் திரைப்படம் வெளியானது.

    மிரட்டும் தனுஷ்

    மிரட்டும் தனுஷ்

    முதன் முதலாக நடிகர் தனுஷ் எழுதியிருக்கும் கதையை செல்வராகவன் இயக்கியுள்ளார். தனுஷ் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் சமீபத்தில்தான் அவரை ஒரு நடிகராகவும் எழுத்தாளராகவும் தான் பார்க்க ஆரம்பித்ததாகவும் அதற்கு முன்னர் வரை தனது தம்பியாக மட்டுமே எண்ணியதாகவும் செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக தனுஷ் தன்னை மிரட்டுகிறார் என்றும் நடிப்பில் கூட அனுபவம் அதிகமானதால் இன்றும் சொல்லித் தர வேண்டாம் என்று தனுஷ் தன்னிடம் கூறினாராம்.

    ஆளவந்தான் சாயல்

    ஆளவந்தான் சாயல்

    படம் வெளியாவதற்கு முன்பு டிரைலரை பார்த்தவர்கள், தயாரிப்பாளர் தானு ஏற்கனவே தயாரித்திருந்த ஆளவந்தான் திரைப்படத்தின் சாயல் இதில் தெரிவதாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காகத்தான் அதே கதையை மீண்டும் தனுஷை வைத்து எடுத்துள்ளதாகவும், மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாகத்தான் வேண்டுமென்றே தனுஷ் நானே வருவேன் திரைப்படத்தை அவசர அவசரமாக வெளியிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு இயக்குநர் செல்வராகவன் விளக்கமளித்துள்ளார்.

    செல்வராகவன் விளக்கம்

    செல்வராகவன் விளக்கம்

    ஒரு படத்தில் அண்ணன் தம்பி கதாநாயகன் மற்றும் வில்லனாக நடிப்பது சிவாஜி காலத்திலிருந்தே நடக்கிறது. அந்த ஒரு புள்ளியை வைத்து இரண்டு கதைகளும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. அதேபோல, முன்பு பல படங்கள் விடுமுறைகளில் ஒன்றாக வெளிவருவது வழக்கம். அது திருவிழா காலம் போல இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி பார்க்க முடிவதில்லை. அதனை மீண்டும் இந்தத் திரைப்படம் மூலம் துவங்கும் முயற்சியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 10 நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் இரண்டு படங்களையும் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பார்கள். அதனால்தான் வெளியிட்டோமே தவிர 200 கோடி 300 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் போட்டி போடுவதற்காக எங்கள் படத்தை வெளியிடவில்லை என்று செல்வராகவன் கூறியுள்ளார்.

    English summary
    After a Long Gap, Dhanush's film "Naanae Varuvean " directed by Selvaraghavan has been released before the release of big budget movie ponniyin selvan. In this case, director Selvaraghavan has responded to the controversial reviews of this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X