twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிபிராஜின் வால்டர் படத்தில் இருந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை நீக்கியது இதுக்குத்தானா?

    By
    |

    சென்னை: சிபிராஜின் வால்டர் படத்தில் இருந்து, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நீக்கப்பட்டது ஏன் என்று அதன் இயக்குனர் கூறினார்.

    11:11 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்கும் படம், வால்டர். அறிமுக இயக்குனர் யு.அன்பு இயக்குகிறார். சிபிராஜ் ஹீரோ. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்கிறார்.

    சமுத்திரகனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். தர்மா பிரகாஷ் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.

    கவுதம் மேனன்

    கவுதம் மேனன்

    இந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் அந்த கேரக்டரில் நடிக்கிறார்.

    கால்ஷீர் பிரச்னை

    கால்ஷீர் பிரச்னை

    இதுபற்றி அறிமுக இயக்குநர் யு.அன்பு கூறும்போது, இந்தப் படத்தின் ஒரு கேரக்டரில் நடிக்க இயக்குநர் கவுதம் மேனன் ஒப்புக்கொண்டிருந்தார். அவர், படம் இயக்குவதில் பிசியாகி விட்டதால், அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. பிறகு பல நடிகர்களை இந்த கேரக்டருக்கு பரிசீலித்தோம்.

    நட்டி என்கிற நட்ராஜ்

    நட்டி என்கிற நட்ராஜ்

    இறுதியாக நட்டியிடம் கேட்டோம். கதையை முழுதாகக் கேட்ட பின் முடிவு செய்வதாகச் சொன்னார். நான் கதை சொன்னேன். அந்த கேரக்டர் மீது அவருக்கு நம்பிக்கை வந்ததை அடுத்து உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றார்.

    வில்லன் கேரக்டரா?

    வில்லன் கேரக்டரா?

    அவர் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக வரும் செய்திகள் பற்றி கேட்டபோது, முழுக்க வில்லன் என்று சொல்ல முடியாது. அவர் கேரக்டர் கடைசிவரை குழப்பத்திலேயே இருக்கும் என்றார்.

    English summary
    Gautham vasudev Menon would be joining the cast of Sibiraj’s Walter, directed by debutant Anbu. Now, he has been replaced by Natty. director anbu explained why has he been replaced.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X