தர்பார் சம்பவம்.. முருகதாஸ் மீது தீராகோபத்தில் நயன்.. பழி வாங்கும் படலமா அந்த பேட்டி?

தர்பார் பட விவகாரம் தான் நயனின் இந்த கோபமான பேட்டிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Nayanthara Latest Interview: நயன்தாராவை ஏமாற்றிய முருகடாஸ்

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி நயன்தாரா கோபமாக பேட்டி அளித்துள்ளதன் பின்புலத்தில் தர்பார் பட சம்பவம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்து கொண்டாடும் அளவிற்கு வெற்றிப்பட நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. சமீபகாலமாக தொடர்ந்து அவர் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அவரது படங்கள் வெற்றி பெறவில்லை என்ற போதும், அவரது மார்க்கெட் சரியவில்லை.

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் பலவற்றிலும் அவரது பெயர் தான் அடிபடுகிறது.

அட்டைப்படம்

அட்டைப்படம்

பொதுவாகவே ஊடகங்களை விட்டு விலகி இருக்கும் நயன், சமீபத்தில் வோக் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து அசத்தினார். அப்போது அளித்த பேட்டியில் பல விசயங்கள் பற்றி அவர் பேசியிருந்தார். தனது காதல் பற்றிக் கூட அவர் பேசியிருந்தார்.

தர்பார்

தர்பார்

இந்நிலையில் தற்போது ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் ஏ.ஆர்.முருகதாஸைப் பற்றி பேசி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் தற்போது தான் அவர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இன்னும் அந்தப் பட வேலைகளே முடியாத வேளையில் நேரடியாக அவர் முருகதாஸையும், கஜினி படத்தையும் விமர்சித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நயனின் இந்த கோபத்திற்கு காரணமே தர்பார் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் தான் எனக் கூறப்படுகிறது.

அடம் பிடித்த நயன்

அடம் பிடித்த நயன்

அதாகப்பட்டது தர்பார் படத்தில் நடித்த போது, நயனுக்கு சம்பளப் பாக்கி இருந்துள்ளது. இதனால் கடைசி தினம் படப்பிடிப்பு வராமல் அவர் அடம் பிடித்ததாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. ரஜினியையே நயன் காத்திருக்க வைத்து விட்டார் என்றும், கடைசியில் முருகதாஸ் சமாதானப் படுத்தி நயனை அன்று நடிக்க வைத்தார் என்றும் கூறப்பட்டது.

இமேஜ் விவகாரம்

இமேஜ் விவகாரம்

இந்த விவகாரம் ஊடகங்களில் கசிய முருகதாஸும், தயாரிப்பு தரப்பும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, முருகதாஸ் மீது நயன் கோபத்தில் இருந்துள்ளார். சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் என நயன் அடம் பிடிப்பதாக வெளியான செய்தி, அவரது இமேஜையே கெடுத்து விட்டதாக அவர் கருதி இருக்க வேண்டும்.

கோபம் எதிரொலி

கோபம் எதிரொலி

எனவே, அதன் எதிரொலியாகத் தான் நேரடியாகவே முருகதாஸை தாக்கி அவர் பேட்டியில் பேசியுள்ளார். இல்லையென்றால் 11 வருடங்கள் கழித்து இந்த விவகாரத்தை அவர் கையில் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அதோடு, நுனி கிளையில் அமர்ந்து கொண்டு அடி கிளையை வெட்டுவது போல் நயன் இப்படி ஒரு பேட்டி அளித்திருக்க மாட்டார்.

திரும்பவும் அதே ஏமாற்றம்

திரும்பவும் அதே ஏமாற்றம்

அதோடு கஜினி படம் போலவே தர்பாரிலும் நயன் கேரக்டர் அவ்வளவாக சொல்லிக் கொள்வது போல் இல்லை என்கிறார்கள். கஜினியில் தான் ஏமாற்றினார் என்றால், தற்போது தர்பாரிலும் அதே கதையா என்ற கோபமும் நயனுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்து தான் நயன் பேட்டிக்கு காரணமாகி விட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X