»   »  விக்ரமுடன் நயன்தாரா ஜோடி சேர இவ்வளவு தாமதம் ஏன் தெரியுமா?

விக்ரமுடன் நயன்தாரா ஜோடி சேர இவ்வளவு தாமதம் ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேது மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி போட்ட விக்ரம், அதன் பிறகு பல சூப்பர் ஹிட், சூப்பர் சொதப்பல் படங்களைத் தந்தார். கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகிகளுடனும் நடித்துவிட்டார், லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் நயன்தாரா தலவிர.

நாயகிகள் விஷயத்தில் விக்ரமின் 'கேரக்டர்' கோடம்பாக்கம் அறிந்தது. இவர்தான் தனக்கு ஜோடி என்று முடிவு செய்துவிட்டால், அவருடன் ஜோடி சேர்ந்தே விடுவார்.

Why Nayanthara not pairs up with Vikram for the past 10 years?

ஆனால் ஏனோ நயன்தாராவுடன் மட்டும் அவரால் சேரமுடியவில்லை.

காரணம்?

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். அப்போது நயன்தாரா விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நயனுக்கு அது ஆரம்பகாலம். பின்னாளில் இப்படி தமிழ் சினிமாவை ஆளும் ராணியாக வருவார் என கற்பனை பண்ணாத காலம். எனவே வந்த வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருந்தார். அப்படித்தான் கள்வனின் காதலி என்ற படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

இதைக் கேள்விப்பட்ட விக்ரம், முன்னணி ஹீரோவான தனது படத்தில் நடிக்க வேண்டும் என்றால் கள்வனின் காதலி வாய்ப்பைக் கைவிட வேண்டும் என்றார்.

நயன்தாராவோ விக்ரமைக் கைவிட்டார். அன்று சில லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாராவை இப்போது சில கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் அதே விக்ரம், எந்த நிபந்தனையுமின்று. காரணம், இப்போது நிபந்தனை விதிக்கும் இடத்திலிருப்பவர் நயன்தாரா!

English summary
Why Vikram not paired with Nayanthara in the past one decade? Here is an interesting Flashback!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil