முதல் பட ஹீரோயின் திருமணத்துக்கு கூட போகலையே.. ட்விட்டரிலும் ஆளை காணோமே.. பாவம் நெல்சன்!
சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியால் பேட்டி கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் நெல்சனை மோசமாக ட்ரோல் செய்வது தனக்கே கஷ்டமாக இருக்கு என பேசி உள்ளார்.
கடைசியாக நடிகர் விஜய் கொடுத்த விருந்து போட்டோவை ட்வீட் போட்டதுக்கு அப்புறம் ட்விட்டர் பக்கமே மனுஷனை ஆளை காணவில்லை.
இந்நிலையில், தனது முதல் பட ஹீரோயின் ஆன நயன்தாராவின் திருமணத்துக்கே அவர் செல்லவில்லை எனக் கூறுகின்றனர்.

சறுக்கிய நெல்சன்
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சனுக்கு அவர் நினைத்ததை விட மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர். நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல பீஸ்ட் படம் இயக்குநர் நெல்சனுக்கு லேசாக சறுக்கி விட்டது.

நல்ல வசூல்
சன் பிக்சர்ஸ் அறிவித்ததை வைத்து பார்த்தால் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், விஜய் ஹேட்டர்கள் நாடு முழுவதும் ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டதன் மூலம் கடும் அப்செட்டில் ஆழ்ந்துள்ளார்.

துபாய் டூர்
உள்ளூரில் எங்கே சென்றாலும், பிரச்சனை தான் என்பதை புரிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் நடிகை பிரியங்கா மோகன், நடிகர் கவின் மற்றும் தனது ஜாலியோ ஜிம்கானா கேங் உடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். சென்னைக்கு திரும்பிய நிலையில், தீவிரமாக தலைவர் 169 படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் இயக்குநர் நெல்சன்.

பூஜா ஹெக்டே கூப்பிட்டும்
சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே மேடைக்கு வந்து நடனமாட இயக்குநர் நெல்சனை அழைப்பார். ஆனால், வேண்டாம் ஏற்கனவே ரொம்ப வச்சி செய்றாங்க என மனக் குமுறலையும் சிரிப்புடனே பேசியிருப்பார். வெளியே எங்கே சென்றாலும், இதே கேள்வியாக இருப்பதால் தான் பல இடங்களுக்கு அவர் தலையையே காட்ட மாட்டுகிறார்.

நயன் திருமணத்தில் பங்கேற்கவில்லை
விஜய் டிவியில் பணியாற்றி வந்த நெல்சன் நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார். இந்நிலையில், தனது முதல் பட ஹீரோயினின் திருமணத்திலேயே ஏன் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில், தான் அதில் பங்கேற்க அவர் மறுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

ஓரளவுக்குத்தான் ட்ரோல்
இயக்குநர்கள் வெற்றி கொடுக்கும் போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தோல்வியை கொடுத்தால் திட்டுவதும் இயல்பு தான். ஆனால், எல்லை மீறிய ட்ரோல்கள் காரணமாக பலரது வாழ்க்கையே பாதித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் பழையபடி தனது டார்க் காமெடிகளை கட்டவிழ்த்து தலைவர் 169 படத்தில் மாஸ் கம்பேக் கொடுப்பார் இயக்குநர் நெல்சன் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











