இதெல்லாம் நியாயமா பிக் பாஸ்?.. இந்த சீசனில் ஒரு சாமானியரும் இல்லை.. திருநங்கையும் இல்லையே?.. ஏன்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன சில சீசன்களாக திருநங்கை போட்டியாளர்களையும், சாமானியர்களையும் அறிமுகப்படுத்தி வந்து கமல்ஹாசன் அரசியல் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் அதெல்லாம் எங்க பாஸ் காணோம் என பிக் பாஸ் ரசிகர்கள் நாக்கைப் பிடுங்குவதை போல கேட்டு வருகின்றனர்.
மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிபாரிசு மூலமாகவே பிக் பாஸ் போட்டியாளர்களாக மாறியுள்ளனர் என்றும் மக்கள் தேர்ந்தெடுத்து யாரையும் அனுப்பவில்லை என்றும் போட்டியாளர்கள் லிஸ்ட்டே செம போரிங்காக உள்ளது.
நிகழ்ச்சியில் அவர்களின் பர்ஃபார்மன்ஸை வைத்து தான் இந்த சீசன் தேறுமா? தேறாதா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டுத் தாக்கி வருகின்றனர்.
திருநங்கை போட்டியாளர்கள் மிஸ்ஸிங்: பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மாரிமுத்து பங்கேற்ற போது ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். ஆனால், ஒரே வாரத்தில் அவர் வெளியேறியது அதிர்ச்சியையும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பின. அதை போக்கவே கடந்த சீசனில் ஷிவினை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மக்கள் தேர்வு செய்த போட்டியாளராகவும் திருநங்கை போட்டியாளராகவும் பங்கேற்ற ஷிவின் கணேசன் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் தனது தனித்திறமையை காட்டி கலக்கி இருந்தார்.

ஆனால், இந்த சீசனில் அது இல்லையே? ஏன்? என்கிற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
சாமானியர்களுக்கும் வாய்ப்பில்லை: நெப்போடிசம், சிபாரிசு என இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஊழல் படிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியாக உள்ளது என்றும் சாமானியர்களில் ஒருவரை கூட பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பவில்லையே இதெல்லாம் நியாயம் தானா பிக் பாஸ்? என்கிற கேள்வியையும் எழுப்பி வச்சு விளாசி வருகின்றனர்.
கடந்த சீசனில் சாமானியராக தனலட்சுமி பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை எல்லாமே விஜய் டிவி புராடக்ட்கள் மற்றும் சிபாரிசு மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தவர்கள் தான் என்பதால் ரசிகர்களுக்கு ஆரம்பமே ஒரு எலைட் ஷோ என்கிற ஃபீலிங்கையே இந்த நிகழ்ச்சி தெரிகிறது. போக போக எப்படி இருக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











