லட்டு பெயரில் நாமம்.. சர்ச்சை பற்றி ஏன் பேசக்கூடாது.. கொந்தளித்த சீரியல் நடிகர்!
சென்னை: திருப்பதி லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், லட்டு சர்ச்சை குறித்து ஏன் பேசக்கூடாது என்று சீரியல் நடிகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டில் மாட்டு, பன்றி, மீன் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, வெளியான ஆய்வக அறிக்கையில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு எண்ணெய் கலந்திருப்பது தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நடிகர் அருண்: சீரியல் நடிகரான அருண் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பதி கோவில் என்பது இந்துக்கள் அனைவருக்கும் அடுத்த வீடு போன்றது. எங்களின் உணர்வு, நம்பிக்கை இந்த கோவில் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்தது எவ்வளவு சென்சிடிவ்வான விஷயம். ஆனால், இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள், இந்த பிரச்சனை தடுக்காமல், இதுபற்றி கேள்வி கேட்பவர்களை மிரட்டும் வகையில் பேசி வருகிறார், குறிப்பாக பவன் கல்யாண்.
ஏன் மன்னிப்பு: நடிகர் கார்த்திக் ஒரு நிகழ்ச்சியில், தவறாக எதுவும் பேசவில்லை, லட்டு பற்றி பேச வேண்டாம் அது சென்சிடிவ்வான விஷயம் என்று தான் சொல்லி இருந்தார். அதற்கு, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மிகவும் காட்டமாக பேசி உள்ளார். இதற்கு நடிகர் கார்த்திக்கும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு கார்த்திக் ஏன் மன்னிப்பு கேட்டார் என்று தெரியவில்லை. இது பொதுவாக நடந்த மிகப்பெரிய தவறு, இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு.
பெரிய நாமம்: ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு விரதம் இருந்து பயபக்தியுடன் கோவிலுக்கு வந்த ஒவ்வொருத்தருக்கும் பெரிய நாமத்தை போட்டு இருக்கீங்க, பெரிய பெரிய ஏமாத்து வேலை செய்து இருக்கிறீர்கள். இதற்கு நாங்க கேள்வி கேட்கத்தான் செய்வோம், அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் அதைவிட்டுவிட்டு, லட்டுபற்றி பேசக்கூடாது என்று எப்படி சொல்லலாம். லட்டு என்கிற பெயரில் எல்லோருக்கும் அல்வாவை கொடுத்துவிட்டு, இப்போ இந்த பழியை யார் மேல போடலாம், விரதம் இருக்கிறேன் என்று இந்த லட்டு விஷயத்தை அரசியலாக்க பார்க்கிறீர்கள் என்று சீரியல் நடிகர் அருண் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











