என்னங்க நீங்க...தளபதி 63 படத்தை டெல்லி ஸ்டேடியத்துல எடுத்திருக்கலாம்ல...!
சென்னை: நடிகர் விஜயின் இன்னும் பெயர் வைக்காத படமான தளபதி 63 படத்தை ஏண்டா செட் போட்டு எடுத்தோம்னு தயாரிப்பாளர் தரப்பு இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம்?
சென்னை ஈவிபி கார்டனில் செட் போட்டு நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்குது. படத் தயாரிப்புக்கான 60 சதவிகிதம் பணம் கஜானாவில் காலியாகிவிட, படப்பிடிப்பு என்னவோ 30 சதவிகிதம்தான் முடிச்சுருக்குன்னு சொல்றாங்க.

கால்பந்து விளையாட்டின் மகளிர் அணி பயிற்சியாளரா இந்த படத்தில் நடிகர் விஜய் நடிச்சுட்டு இருக்கார்னு ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருக்கு. .
ஈவிபி கார்டனில்தான் நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவிக்காக நடத்தும் பிக் பாஸ் 3 க்கும் செட் போட வேண்டி இருக்கு.
இதனால் படப்பிடிப்பை துரிதப்படுத்த சொல்லியும் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் போயிருக்கு. முதலில் படப்பிடிப்பு தாமதமானதற்கு மேனேஜர்தான் காரணம்னு அவரை பணி நீக்கம் செய்தாலும், இப்போது தாமதத்துக்கு காரணம் இயக்குநர் அட்லீ என்று பேச்சு அடிபடுகிறதாம்.
எதுக்கு இப்படி அவதி படணும்.. 2.ஓ ரஜினி படம் டெல்லி ஸ்டேடியத்துலதானே எடுத்தாங்க... அதே போல இந்த படத்தையும் எடுத்திருக்கலாமேன்னு இண்டஸ்ட்ரியில விஜயின் வெல்விஷர்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காங்க..
குறிப்பிட்ட நேரத்துல படப்பிடிப்பை முடிச்சு பிக் பாஸ் 3 க்கான செட் போட, படப்பிடிப்பு குழு ஈவிபி கார்டனை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது படக்குழு.


Click it and Unblock the Notifications











