பாவ செவிகள்.. இந்த அளவுக்கு ஆபாச வசனங்கள் தேவையா? கொஞ்சம் ‘மியூட்’ போட்டு இருக்கலாமே?

சென்னை: ஒடிடி தளத்தில் சென்சார் இல்லை என்பதற்காக இப்படி எல்லை மீறிய ஆபாச வசனங்கள் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் தேவையா என்ற கேள்வி சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

ஆணவக் கொலைகளை செய்பவர்களை இப்படி அசிங்கமாக திட்டி விட்டால் மட்டும் ஒழிந்து விடுவார்கள் என இயக்குநர்கள் எண்ணுவது சரியான அணுகுமுறை தானா? என்கிற கேள்வியும் எழுகிறது.

கதையின் அழுத்தம் காரணமாக ஆபாச வசனங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைப்பது அடுத்து பாவ விழிகளுக்கு சில படையல்கள் வர வழிவகுக்கும் என்கிற அச்சத்தையும் கூடவே தருகிறது.

எல்லை மீறிய ஆபாசம்

எல்லை மீறிய ஆபாசம்

அஞ்சலியை உள்ளாடையுடன் முதல் காட்சியில் காட்டும் போதே எல்லை மீறிய ஆபாசத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துகிறார். லெஸ்பியன் கிஸ், காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையான வசனங்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனின் லவ் பண்ணா உட்றணும் கதை முழுக்க டிராவல் செய்கிறது.

கெட்ட வார்த்தைகளின் குவியல்

கெட்ட வார்த்தைகளின் குவியல்

உருவில் சிறியதாக இருந்தாலும், வில்லத்தனத்தில் உயர்ந்து நிற்கும் ஜாபர் சாதிக்கின் மிரட்டல் நடிப்பு பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது. இரண்டு அஞ்சலிகளில் ஒரு அஞ்சலிக்கு அஞ்சலி செய்து விட்டு, அடுத்த அஞ்சலியையும் போட்டுத் தள்ள பிளான் செய்வது பயத்தைக் கொடுக்கிறது. அத்தனை இருந்தும், அதற்கும் மேலாக அப்படியொரு கெட்ட வார்த்தை குவியலை ஏன் பயன்படுத்தினார் இயக்குநர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

ஆணுறுப்பு அறுத்தல்

ஆணுறுப்பு அறுத்தல்

வயதுக்கு வந்த பெண்ணை கடத்த நினைத்து வயதுக்கு வராத பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் கொடும்பாவிகளின் ஆணுறுப்பை அறுக்கும் இடமே அப்ளாஸ் அள்ளும் நேரத்திலும், வேண்டுமென்றே ஆண்குறி பற்றிய ஆபாச வார்த்தையை போட்டு ஆதித்யா பாஸ்கரை பேச வைத்திருப்பது திணிப்பாக தோன்றுகிறதே கெளதம் மேனன் என்கிற கேள்வியை கிளப்புகிறது.

அந்த நிலையிலும் நிதானம்

அந்த நிலையிலும் நிதானம்

பாவக் கதைகளில் உள்ள 4 கதைகளில் விக்னேஷ் சிவன் மற்றும், கெளதம் மேனனின் கதைகளில் ஆபாச வசனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், சுதா கொங்கராவின் தங்கம் மற்றும் வெற்றிமாறனின் ஓர் இரவு கதைகளில் அழுத்தமும் ஆழமும் நிறைந்து இருக்கிறது. அதே போல ஆபாச வசனங்களுக்கு இடமே இல்லை. பிரகாஷ் ராஜை பார்த்தாலே பயம் வருகிறது. வெற்றிமாறன் அங்கேயே நிறுத்திக் கொண்டது சிறப்பு. சத்தாரை நினைத்தாலே பாவமாய் இருக்கிறது ஸ்கோர் செய்த சுதா கொங்கரா.

தாண்டி செல்லணும்

தாண்டி செல்லணும்

நடந்ததை நடந்த மாதிரியே சொல்லி சுதா கொங்கராவும், வெற்றிமாறனும் பயமுறுத்திய நிலையில், இனி இப்படி நடக்க வேண்டும் என அதையும் தாண்டி செல்லணும் என்கிற கதையை விக்னேஷ் சிவனும், கெளதம் மேனனும் கொடுத்த இடத்தில் பாராட்டுக்களை அள்ளி உள்ளனர். ஆனால், அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இருக்க வேண்டிய பாவக் கதைகளை பச்சை பச்சையாய் பேசி சில தரப்பினரை தாண்டி பார்க்க வைக்கமுடியாமல் செய்து விடுமோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X