சீதாவை பிரிந்த பார்த்திபன்.. இரண்டாவது திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. உண்மை இதானா?

சென்னை: புதிய பாதை படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற பார்த்திபன் கோலிவுட்டின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் பட்டையை கிளப்பிவருகிறார். அவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியிலேயே முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்யாதது பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கிறார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சினிமா பணிகளை கற்றுக்கொண்ட பார்த்திபன் சீதாவை ஹீரோயினாகவும், தன்னை ஹீரோவாகவும் வைத்து இயக்கிய படம் புதிய பாதை. தான் இயக்கிய முதல் படத்திலேயே கமர்ஷியலாகவும், சமூகத்துக்கு தேவையான கருத்தையும் வைத்து படம் எடுத்து கவனம் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வெற்றி இல்லை; ஆனாலும்: புதிய பாதை படத்தின் வெற்றிக்கு பிறகு உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை என ஏகப்பட்ட படங்களை எடுத்தாலும் அந்தப் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அவை அனைத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டு தனது பாதை தனித்துவமான பாதை என்பது நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவர் இன்னும் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் எண்ணம்.

Why Parthiban Never Second Marriage After Seperation with Seetha Actor Reveals in New Interview
Photo Credit:

நடிகராக பார்த்திபன்: முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் அவருக்கு நடிப்பதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருகட்டத்தில் தான் படங்கள் இயக்குவதை குறைத்ததால் மற்றவர்களின் இயக்கங்களிலும் ஹீரோவாக ஹிட் படங்களை கொடுத்தார். இப்போது முழுக்க முழுக்க குணசித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துவருகிறார். இருப்பினும் இயக்கத்தை விட்டு முழுவதுமாக விலகவுமில்லை. கடைசியாக அவர் இயக்கிய டீன்ஸ் படம்கூட வித்தியாசமான அட்டெம்ப்ட்டாகத்தான் பார்க்கப்பட்டது.

திருமணமும், பிரிவு: இதற்கிடையே முதல் படத்திலேயே தனக்கு ஜோடியாக நடித்த சீதாவை காதலித்தார். தங்கள் காதலை திருமணம்வரை சென்று எடுத்து சென்று ஒரு மகள், மகனை பெற்றவர்கள், நீண்ட காலத்துக்கு தங்கள் ரிலேஷன்ஷிப்பை கொண்டு செல்லவில்லை. சில காரணங்களால் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். சீதாவை பிரிந்த பிறகு இரண்டாவது திருமணமும் செய்யாமல் சிங்கிளாகவே காலத்தை கழிக்கிறார் அவர்.

என்ன காரணம்?: இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாதது பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "சீதாவுக்கு பிறகு எந்த பெண்ணையும் என்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவில்லை. முக்கியமாக வேகமான இந்த உலகத்தில் உறவுகள் நிலையற்றதாக இருக்கின்றன. எனவே அவர்களுடன் பயணிக்காமல் நினைவுகளுடன் பயணிக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X