இவங்கள ஏன் இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்டல? பிரபல நடிகையை பார்த்து ஏங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் வேலையை யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால், ஷாலு ஷம்மு, ஷிவானி போன்ற நடிகைகள் செய்து வருகின்றனர்.
அந்த லிஸ்டில் இன்ஸ்டாகிராமில் தினமும் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வரும் நடிகை பார்வதி நாயரை ஏன் இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்டல என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதாரு அதாரு
கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் அருண் விஜய்க்கு ஜோடியாக வரும் பார்வதி நாயரையும், அந்த அதாரு அதாரு பாடலையும் தமிழ் ரசிகர்கள் அதிலும் தல ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

ஏகப்பட்ட படங்கள்
பாப்பின்ஸ் எனும் மலையாள படம் மூலம் அறிமுகமான பார்வதி நாயர், ஏகப்பட்ட மலையாள படங்கள், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமலின் உத்தம வில்லன், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, விஜய் சேதுபதியுடன் சீதக்காதி, நிமிர், என்கிட்ட மோதாதே என எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் அழகி
மாடல் அழகியான பார்வதி நாயர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை களமிறக்கி வைரலாக்கி வருகிறார். யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால், ஷிவானி உள்ளிட்ட இளம் நடிகைகளுக்கு கடும் போட்டியை இன்ஸ்டாகிராமில் கொடுத்து வருகிறார் பார்வதி நாயர். அவர் பதிவிடும் ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
எத்தனையோ இளம் நடிகைகளின் பெயர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போகின்றனர் என அடிபட்டு வருகிறது. ஆனால், அப்படி கூட பார்வதி நாயரின் பெயர் அடிபடவில்லை. இவரது கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நீங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமே என கோரிக்கை வைத்து வருகின்றனர். சீக்கிரமே பரிசீலனை செய்வார் என்று தெரிகிறது.
Recommended Video

சொப்பன சுந்தரி
சன் லைஃப் சேனலில் நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் பார்வதி நாயர், ஒரு அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பே ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அணியை சாக்ஷி அகர்வால் தலைமை ஏற்றார். ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியான அதில், கலந்து கொண்ட பார்வதி நாயர் விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











