twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதல் மன்னன் பேரனை கரெக்ட் பண்ண நினைக்கிறாரா பாவனி? தனியா கூப்பிட்டு டைரக்டா அப்படி கேட்டுட்டாரே?

    |

    சென்னை: பாவனி ரெட்டிக்கும் அபிநய்க்கும் இடையே பிக் பாஸ் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    காதல் மன்னன் பேரனை பாவனி கரெக்ட் பண்ண திட்டம் தீட்டுகிறாரோ என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

    இருவரும் நேரடியாக சந்தித்து பேசியதில் இருந்தே இதில், யாருக்கு அந்த இன்டென்ஷன் இருக்கு என நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.

    வருண், சிபி கதை கனெக்ட் ஆகல...தாமரை கதை பாதி புரியல...ரெவ்யூ கொடுத்த பாவனி வருண், சிபி கதை கனெக்ட் ஆகல...தாமரை கதை பாதி புரியல...ரெவ்யூ கொடுத்த பாவனி

    கணவர் இல்லை

    கணவர் இல்லை

    முதல் கணவரை இழந்து தவிக்கும் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் கைகூடியும் நடைபெறவில்லை. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக வந்துள்ள அவர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரனிடம் அப்படி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

    மனைவி தான் எல்லாம்

    மனைவி தான் எல்லாம்

    தனது மனைவியால் தான் இந்த இடத்திற்கே வந்துள்ளேன் என வார்த்தைக்கு வார்த்தை மனைவி மற்றும் குழந்தையை பற்றி பேசி வரும் அபிநய் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வரும் நிலையில், அவரது ரூட்டை பாவனி ரெட்டி மாற்றி விடுவாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    ரகசிய பேச்சு

    ரகசிய பேச்சு

    தன்னை தவறான கண்ணோட்டத்தில் அபிநய் பார்ப்பதாக அபிஷேக் ராஜா, மதுமிதா உள்ளிட்ட சக போட்டியாளர்களிடம் பாவனி ரெட்டி ரகசிய பேச்சு பேசுவதை திடீரென பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன ஆச்சு? என்னடா நடக்குது இங்கே? போன்ற ரியாக்‌ஷன்களை போட்டு வருகின்றனர்.

    காதல் வலை

    காதல் வலை

    ஒவ்வொரு போட்டியாளர்களிடம் பேசி இந்த விஷயம் பற்றி பிக் பாஸ் வீட்டுக்கு தெரியப்படுத்திய பாவனி ரெட்டி கடைசியாக கிச்சனில் சிவனேன்னு நின்று கொண்டிருந்த அபிநய்யை அழைத்து "வாங்க.. உட்காருங்க.. தனியா பேசணும்" என சொன்னதும் ஒன்றுமே புரியாத குழந்தையாக வந்து அமர்ந்தார் அபிநய்.

    என்ன நோக்கம்

    என்ன நோக்கம்

    ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரனான அபிநய் இதுவரை யாரிடமும் பாவனி ரெட்டி பற்றி பேசாத நிலையில், பாவனி ரெட்டி சில போட்டியாளர்களிடமும் நேரடியாக அவரிடமே அந்த விஷயம் பற்றி பேச ஆரம்பித்தது என்ன நோக்கத்திற்கு என ரசிகர்களுக்கு புரியவில்லையே என குழம்பி தவித்து வருகின்றனர்.

    லவ் டிராக்கா

    லவ் டிராக்கா

    பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஃபேக் லவ் டிராக் அரங்கேறும். இந்த சீசனில் அழகு சிலையாக இருக்கும் பாவனி ரெட்டியை வைத்து லவ் டிராக்கை கஷ்டப்பட்டு நடத்த திட்டமிட்டு வருகிறதா பிக் பாஸ் குழு? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    நெற்றியில் முத்தம்

    நெற்றியில் முத்தம்

    அபிநய்யிடம் உங்களுக்கு எந்தவொரு இன்டென்ஷனும் இல்லையா? நான் தான் தப்பா நினைச்சிட்டேனா என கேட்கும் பாவனி ரெட்டி அபிஷேக் ராஜா நேரா என்கிட்ட வரான் என்னை கட்டிப்பிடிக்கிறான். என் நெத்தியில் முத்தம் கொடுக்கிறான் போன்ற விஷயங்களையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இதெல்லாம் வேற நடக்குதா என கொந்தளிக்க வசமாக ஏகப்பட்ட கேமரா காட்டாத ரகசியங்களையும் அபிநய்யிடம் சொல்வது ஏன் தான் என்றும் புரியவில்லை.

    கேமரா காட்டலையா

    கேமரா காட்டலையா

    பாவனிக்கு உண்மையாகவே அபிநய் ஏதாவது ரூட்டு போட்டு அதனை பிக் பாஸ் வீட்டு கேமரா காட்டாமல் மறைத்து விட்டதா? இதற்கு மேல் அபிநய்யின் நடவடிக்கையை கூடுதல் கேமராவாக பிக் பாஸ் ரசிகர்கள் நோட் பண்ண வேண்டும் என்றும் பாவனி ரெட்டி ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

    மனைவி பார்பாங்களே

    மனைவி பார்பாங்களே

    கணவனை நம்பி சினிமாவில் பெரிய ஆளாக வருவார். மீடியா வெளிச்சம் அவர் மீது விழ வேண்டும் என நம்பி இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பிய அபிநய்யின் மனைவி இந்த சீனை பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணிருப்பாங்க.. இதையும் பிக் பாஸ் எடிட்டர்கள் கட் செய்திருக்கலாம் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் என்னலாம் பார்க்க போறாமோ வெயிட் பண்ணுவோம்!

    English summary
    Pavani Reddy wrongly thought Gemini Ganeshan grandson Abinay Vaddi try to correct her in a romantic way makes fans un happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X