Maniratnam: நடிகர்கள் பாசம் இவ்ளோதானா? மணிரத்னத்தை மறந்து டீலில் விட்ட பொன்னியின் செல்வன் ஸ்டார்ஸ்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் ஒருத்தர் கூட மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசி உள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், அது பற்றிய ப்ரமோஷன் ட்வீட்டையோ இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையோ படத்தில் நடித்த நடிகர்களே சொல்லவில்லையே ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வழக்கம் போல ரசிகர்கள் தான் இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகின்றனரே தவிர அவர் இயக்கத்தில் நடித்த பல நடிகர்களும் அமைதி காத்து வர என்ன காரணம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

சியான் விக்ரம் முதல் ஜெயம் ரவி வரை: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சியான் விக்ரம், வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி, பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் மற்ற முக்கிய வேடங்களில் நடித்த யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
கண்டுக்காத ஹீரோயின்கள்: இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்களின் காட்சிகளை பதிவிட்டு அவரது சாதனைகளை ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் அடுக்கி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடித்த த்ரிஷா, பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, வானதியாக நடித்த சோபிதா துலிபாலா உள்ளிட்ட யாருமே இதுவரை ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை என்றும் இவர்கள் அனைவருமே சமூக வலைதளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பவர்கள் என்கிற நிலையில், மணிரத்னத்தை நேரில் சந்தித்து பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றால் கூட பரவாயில்லை ஒரு வாழ்த்து செய்திக் கூட போட முடியவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுதான் காரணமா: சியான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் உடன் வெளிநாட்டில் சுற்றுலா செய்து வருகிறார். ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடன் சம்மர் டூர் அடித்து வருகிறார். நடிகர் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளில் பிசியாக இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











