அவசரப்படுகிறாரா பிரபாஸ்.. பாகுபலிக்கு பிறகு பெரிய அனுபவம் இல்லாத இயக்குநர்களுடன் அவர் இணைவது ஏன்?
சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி விட்டார் நடிகர் பிரபாஸ்.
டோலிவுட் நடிகராக இருந்த அவர், தற்போது பான் இந்திய நடிகராக மாறி விட்டார்.
ஆனால், பாகுபலி படங்களுக்கு பிறகு, பெரிய அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை அவர் ஏன் தேர்வு செய்வதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேரும் புகழும் கொடுத்த பாகுபலி
நான் ஈ, மகதீரா என சின்ன சின்ன சோதனைகளை வெற்றியடைந்த பிறகு பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்குநர் ராஜமெளலி இயக்கினார். அந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து அசத்தி இருந்தார். பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, மகேஷ் பாபு உள்ளிட்ட மற்ற டோலிவுட் நடிகர்கள் எட்டாத பேரையும் புகழையும் அவர் பெற்றார்.

உலகளவில் மார்க்கெட்
ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் பட நடிகர்களே கண்டு ஆச்சர்யப்படும் அளவுக்கும், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படும் அளவுக்கும் பாகுபலி படம் இருந்தது. சுமார் 2 ஆயிரம் கோடி வசூலை தாண்டி, பாலிவுட் நடிகர்களையே பின்னுக்குத் தள்ளிய பிரபாஸின் மார்க்கெட் உலகளவில் ஒரே அடியாக உச்சத்துக்கு சென்றது.

பாகுபலிக்கு பிறகு
ஆனால், பாகுபலி படத்திற்கு பிறகு, அவர் நடித்த சாஹோ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. 300 கோடியில் பாகுபலியை விட பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடித்திருந்தார். இருந்தாலும் அந்த படம் சிறப்பாக அமையவில்லை. அதற்கு முழு காரணமும் இயக்குநர் சுஜீத்தின் வீக்கான திரைக்கதையும், முன் அனுபவம் இல்லாததும் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன.

ஒரு படம் மட்டுமே
சாஹோ படத்தை இயக்கிய இயக்குநர் சுஜீத், அதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு நடிகர் சர்வானந்த் நடிப்பில் சமீபத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் ஃபிளாப் பண்ணாரே அவரை வைத்து ரன் ராஜா ரன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், அவரை நம்பி 300 கோடி பட்ஜெட்டில் எப்படித் தான் படம் நடிக்க பிரபாஸ் சம்மதித்தாரோ தெரியவில்லை.
Recommended Video

ராதே ஷ்யாம்
அடுத்ததாக பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தை இயக்கியுள்ள ராதாகிருஷ்ணன், தெலுங்கில் கோபிசந்தை வைத்து ஜில் எனும் படத்தை 2015ல் இயக்கினார். தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக ராதே ஷ்யாம் படத்தை உருவாக்கி வருகிறார். அந்த படத்தின் ரிசல்ட் ரிலீசானவுடன் தெரிந்து விடும்.

நடிகையர் திலகம் இயக்குநர்
வைஜைந்தி பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் பிரபாஸ் படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே அந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். நாக் அஸ்வின் இதுவரை 2 படங்கள் மட்டுமே பண்ணி உள்ளார். பெரிய ஹீரோக்களை வைத்து பான் இந்தியா படமாக பிரபாஸின் இந்த படத்தை நன்றாகவே அவர் எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அவரும் மிகப்பெரிய அனுபவம் இல்லாதவர் என்று தான் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆதி புருஷ்
இப்போ லேட்டஸ்ட்டா நடிகர் பிரபாஸ், ஆதி புருஷ் படத்திற்காக கைகோர்த்துள்ள இயக்குநர் மராத்தி மொழியில் லோகமானியா மற்றும் பாலிவுட்டில் தான்ஹாஜி என இரு படங்களை மட்டுமே இயக்கியவர். அஜய் தேவ்கன், சைஃப் அலி கானை வைத்து இந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை அவர் கொடுத்திருந்தாலும், பிரபாஸின் இந்த தேர்வு பற்றித் தான் தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது முக்கியமல்ல
நடிகர் பிரபாஸ், இதுவரை, இயக்குநர் யார், நடிகர்கள் யார் என்ற பெயரை மையப்படுத்தி படங்களில் கமீட் ஆவது கிடையாது. கதை.. கதையை மட்டுமே நம்பும் ஒரு நல்ல ஹீரோ. சாஹோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்து, அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், மற்ற இயக்குநர்களும் அப்படியே செய்வார்கள் என அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. அவரது மனதுக்கு சாஹோ கதையும் சிறப்பானது தான். ஆதிபுருஷ் கதையும் சிறப்பானது தான். ராமர் கதாபாத்திரம் என ரூமர்கள் கிளம்பி வருகின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம் பிரபாஸின் இந்த கணிப்பு எல்லாம் எப்படி வொர்க்கட் ஆகின்றது என்பதை!


Click it and Unblock the Notifications











