பிரபுதேவாவுக்கு ‘பத்மஸ்ரீ’.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க மத்திய அரசோட கணக்குப் புரியும்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகர் பிரபுதேவாவுக்கு பூர்வீகம் மைசூர் என்பதால், அவருக்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிருதுகளைப் பெறுபவர்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குநராக, இயக்குநராக மற்றும் நடிகராக பணி புரிந்து வரும் பிரபுதேவா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் மிகவும் பிரபலமானவர் பிரபுதேவா. தமிழ் மற்றும் இந்தி படம் ஒன்றிற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்.

ரசிகர்கள் குழப்பம்:

ரசிகர்கள் குழப்பம்:

இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பிரபுதேவாவின் பெயர் கர்நாடகா பிரிவில் இருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரபுதேவாவுக்கு ஏன் கர்நாடகப் பிரிவில் விருது என்பதே அவர்கள் மனதில் தோன்றிய கேள்வி.

மைசூரில் பிறந்தவர்:

மைசூரில் பிறந்தவர்:

ஆனால், பிரபுதேவா கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் என்றாலும், சிறுவயதிலேயே இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. இதனால் இவரை பெரும்பாலானோர் தமிழர் என்றே கருதி வருகின்றனர்.

தமிழில் தான் அதிகம்:

தமிழில் தான் அதிகம்:

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பிரபுதேவா பிறந்தது கர்நாடகா என்றாலும் இதுவரை அவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் பணி புரியவில்லை. தமிழில் அதிக படங்களில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் அவர் பணியாற்றி உள்ளார். இதனால் தமிழகத்தில் தான் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்தியிலும் ரசிகர்கள்:

இந்தியிலும் ரசிகர்கள்:

இதேபோல், இந்தியில் அவர் இயக்கிய படங்கள் சில தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், அவருக்கு பத்மஸ்ரீ விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் அளிக்கப்பட்டிருப்பது அவரது தமிழ் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X