Salaar: ஒவ்வொருத்தரும் ஆர்மி கொண்டு வராங்க.. ஆனால், கிளைமேக்ஸ்ல என்ன பாஸ் ஜாம்பி ஃபைட்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார் படத்தை பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் படத்தில் எந்த சரக்கும் இல்லை என்றும் வெறும் மண்டைக்குள்ள மெஷின் கன்னும் கத்தி வீசும் சத்தம் தான் கேட்குது என கலாய்த்து வருகின்றனர்.

முதல் பாகத்தில் ஸ்ருதிஹாசனை ஏன் வில்லன் டீம் துரத்துகிறது என்பதற்கு எந்தவொரு காரணமும் சொல்லவில்லை. பிரபாஸுக்கும் பிருத்விராஜுக்கும் ஏற்பட்ட பகையையும் ரிவீல் செய்யவில்லை. ஒரு கதையை ஆரம்பித்து விட்டு வேறு ஒரு கதை ஓடிக் கொண்டிருப்பது போல படம் வேறு திசையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Why Prashanth Neel believes zombie type fight at Salaar Cease Fire climax?

அப்பா வந்த பிறகு பிருத்விராஜ் ஏன் அவருக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கிறார் என்றும் அதன் பின்னர் கிளைமேக்ஸில் ராணுவத்துடன் சண்டைக் காட்சி நடக்காமல் ஜாம்பி ஃபைட் நடப்பது ஏன்? க்ரீன் மேட்டில் ஆர்மி என ஒரே காட்சியில் ரிப்பீட் மோடில் போட்டு காட்டுகின்றனர். ஆனால், கதைக்குள் வரும் போது அவங்க எல்லாம் எங்கே காணாமல் போகின்றனர் என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தெளிவாக இல்லை: கான்சார் என சொல்லிக் கொண்டு நிபந்தனை புத்தகம் என வைத்துக் கொண்டு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் எந்தவொரு நிபந்தனதைக்கும் கட்டுப்படாமல் பிரபாஸின் புகழ் பாடும் படலமாக மாறியிருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. அத்தனை பேர் கையில் துப்பாக்கி இருந்தாலும் பிரபாஸ் மீது அதை பயன்படுத்த மாட்டோம் என சத்தியம் செய்துக் கொண்டு வந்து அவர் கையால் சாகின்றனர்.

ஆர்மியா வருது: சீஸ் ஃபயர் அமல்படுத்திட்டாங்கன்னு சொன்ன உடனே ஒவ்வொருத்தரும் பிக் பாஸ் ஆர்மி போல ஏகப்பட்ட ஆர்மியை கொண்டு வந்து இறக்குறாங்க, ஆனால், அந்த ஆர்மிகள் எல்லாம் எங்கே தங்கியிருக்காங்க, என்ன செய்றாங்க என்று கூட காட்டவில்லை. சிஜியில் சில காட்சிகள் டிரெய்லருக்கு பயன்படுத்த வைத்துள்ளதாகவே தெரிகிறது.

ஜாம்பி ஃபைட்: ஜான் விஜய்க்கு கேஜிஎஃப் கருடன் ராமசந்திரா எல்லாம் நண்பனாக இருந்தாலும், கடைசியில் பிருத்விராஜை பழி வாங்க அவர் வைக்கும் ஜாம்பி ஃபைட்டும் பிரபாஸும் பிருத்விராஜும் அத்தனை ஜாம்பி போன்ற மனிதர்களையும் கொன்று குவிக்கும் காட்சிகள் எல்லாம் வீடியோ கேம் விளையாட்டாகவே உள்ளன. இந்த படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் வில்லன் ஆட்கள் பயந்து நடுங்குவது எல்லாம் பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. வெயிட்டான குறிப்பிட்ட வில்லன் என்று யாருமே இல்லாமல் முதல் பாகம் முடிவது மிகப்பெரிய மைனஸ் ஆகவே தெரிகிறது.

எமோஷனலே வரல: பிருத்விராஜ், பிரபாஸ் இடையே நட்பும், ஈஸ்வரி ராவ் - பிரபாஸ் இடையே வரும் அம்மா, மகன் பாசம் என எதிலுமே எமோஷனல் கனெக்ட் சுத்தமாகவே இல்லை. நாங்கள் சொல்றது தான் கதை, காட்டுறது தான் படம் என பிரசாந்த் நீல் எந்தவொரு ரூல்ஸும் இல்லாமல் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி இருக்கிறார். பிரபாஸின் முகம் ரொம்பவே வாட்டமாகவே காணப்படுகிறது. உடம்பை அந்தளவுக்கு பெரிதாக்க வேண்டும் என மெனக்கெட்டதன் விளைவு முகத்தில் இருந்த டார்லிங்கை காணவில்லை.

2ம் பாகம் எப்படி இருக்கும்?: முதல் பாகத்தில் உள்ள பல கேள்விகளுக்கும் இரண்டாம் பாகம் பார்த்தால் தான் விடை தெரியும் என்பது போலத்தான் படம் இருக்கிறது. முன்னதாகவே காமிக்ஸ், கார்ட்டூன் எல்லாம் விட்டு விட்டு இப்படியொரு படத்தை கொடுத்திருந்தால் ஒருவேளை ரசிகர்கள் கனெக்ட் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X