நிரூப் வேண்டாம் என்று சொல்லியும் பிரஷர் கொடுத்த பிரியங்கா, அபிஷேக்.. கடுப்பான இமான் அண்ணாச்சி!

சென்னை: இமான் அண்ணாச்சியை டார்கெட் செய்து நியூஸ் சேனல் நிகழ்ச்சியில் கன்டென்ட் பண்ண நிரூப்புக்கு சுத்தமாக விருப்பமில்லை என்பதை சிபியிடம் அவரே சொன்ன நிலையிலும், பிரியங்கா மற்றும் அபிஷேக் சேர்ந்து கொண்டு நிரூப்புக்கு பிரஷர் கொடுத்து இப்படியொரு டாஸ்க்கை நடத்துவதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

தான் பேசியதற்காக முன்னதாக நிரூப்பிடம் இமான் அண்ணாச்சி பிரியங்கா, அபிஷேக் கேங் இருக்கும் போதே வந்து மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்த நிலையிலும் பிரியங்கா இந்த பிரச்சனையை பெரிது படுத்துவது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸாக இந்த வாரம் லக்சரி டாஸ்க் மாறி உள்ள ஃபேக் நியூஸ்கள் தான் நிறைய வருமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வாய்ப்பளித்த பிக் பாஸ்

வாய்ப்பளித்த பிக் பாஸ்

சிலருக்கு மட்டுமே ஃபேவர் செய்வது போல காட்சிகளை எடிட் பண்ணி போடுறாங்க.. 24 மணி நேரம் நடக்கும் விஷயத்தில் பல விஷயங்களை காட்டுவதில்லை என பிக் பாஸ் போட்டியாளர்களே வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்த நிலையில், பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் என ஒரு டம்மி டாஸ்க்கை உருவாக்க அதிலும் அதிகம் காட்டப்படும் பிரியங்காவே பேசுவது ரொம்பவே ரசிகர்களை இரிடேட் ஆக்குகிறது.

மன்னிப்பு கேட்ட அண்ணாச்சி

மன்னிப்பு கேட்ட அண்ணாச்சி

நிரூப் தனது கேப்டன்சியை பறித்துக் கொண்ட கோபத்தால் நிரூப் மீது கடுப்பான இமான் அண்ணாச்சி அவரை பார்த்து பயந்துட்டியா என கேட்டதும் நிரூப்புக்கு எதிராக அவருடைய பேச்சை கேட்க மாட்டேன் என அண்ணாச்சி சொன்னதும் பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் இமான் அண்ணாச்சி நேரடியாகவே மன்னிப்பு கேட்டு விட்டார்.

வேண்டாம்னு சொன்ன நிரூப்

வேண்டாம்னு சொன்ன நிரூப்

ஆனாலும், அந்த விவகாரத்தையே செய்தி கன்டென்ட்டாக ஹைலைட் செய்யலாம் என பிரியங்காவும் அபிஷேக்கும் ஐடியா பண்ண நிரூப்புக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு கிடையாது. சிபி க்ளியராக நிரூப்புக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்பதை புரிய வைத்து விட்டார்.

எகிறிய பிரியங்கா

எகிறிய பிரியங்கா

நிரூப் வேண்டாம் என்று சொன்னாலும், அதெப்படி விடுறது என்றும் நீ நல்லா சோலோ கேம் ஆடுற நிரூப் என அவரிடமே சண்டை போட்டு கடைசியாக எந்தவித ஈடுபாடும் இல்லாமல் நிரூப் உட்கார இமான் அண்ணாச்சியை பழி தீர்த்துக் கொண்டார் பிரியங்கா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக

இரண்டு நாட்களுக்கு முன்பாக

கடைசி இடத்தில் ஐக்கி பெர்ரியும் நிரூப்பும் தான் உள்ளனர் என்பது பிரியங்காவுக்கு எப்படி இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தெரியும் என்கிற கேள்வியும் பிரியங்காவின் உளறல் பேச்சால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். இமான் அண்ணாச்சி நிரூப்பிடம் இரு நாட்களுக்கு முன்னாடியே நீ பயந்துட்டியான்னு கேட்டு அவரை மனதளவில் கஷ்டப்படுத்தினார் என பிரியங்கா சொன்னதை பிக் பாஸ் எடிட்டர் கட் செய்து இருக்கலாம்.

கடுப்பான அண்ணாச்சி

கடுப்பான அண்ணாச்சி

இமான் அண்ணாச்சியை லாக் செய்வது போல பிரியங்கா பேச அதற்கான விளக்கத்தை அண்ணாச்சி கேட்க அப்படியே அபிஷேக் ராஜா பிரியங்காவை காப்பாற்றியதும் பிரியங்கா பதில் சொல்ல முடியாமல் திணறியதையும் பார்த்து இமான் அண்ணாச்சி பயங்கரமாகவே கடுப்பாகி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X