twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாலினி பாண்டே விவகாரத்தில் இதுதான் நடந்தது? சொல்கிறார் தயாரிப்பாளர் சிவா

    By
    |

    சென்னை: நடிகை ஷாலினி பாண்டே விவகாரத்தில் என்ன நடந்து என்பது பற்றி தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம் அளித்துள்ளார்.

    மூடர் கூடம் நவீன், இயக்கும் படம்,அக்னிச் சிறகுகள். இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங், கொல்கத்தா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. அடுத்து கஜகஸ்தானில் நடக்க இருக்கிறது.

    ஷாலினி பாண்டே

    ஷாலினி பாண்டே

    இந்தப் படத்தில் ஹீரோயினாக, ஷாலினி பாண்டேவை முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் அவரை நீக்கிவிட்டு அக்‌ஷரா

    ஹாசனை நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஷாலினி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஏன் இந்த வழக்கு என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    27 நாள் ஷூட்டிங்

    27 நாள் ஷூட்டிங்

    இதுபற்றி அவஎர் கூறும்போது, அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்த்துட்டுதான் ஷாலினியை இந்தப் படத்துக்கு புக் பண்ணினோம். 100 நாள் கால்ஷீட் வேணும். வெளிநாடுகள்ல ஷூட்டிங் இருக்குன்னு சொல்லி ரூ.35 லட்சம் சம்பளம் பேசினோம். 15 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். பிறகு 27 நாள் அந்த பெண் நடிப்பில் ஷூட் பண்ணியிருக்கோம்.

    ரன்வீர் கபூர் படம்

    ரன்வீர் கபூர் படம்

    அப்புறம் அக்டோபர், நவம்பர்ல அருண் விஜய், விஜய் ஆண்டனி காம்பினேஷன்ல ஷூட்டிங் இருக்கும்னு சொன்னோம். அப்ப, எனக்கு இந்தி படம் இருக்கு. இடையில் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ண முடியுமா?ன்னு கேட்டார்.

    கஜகஸ்தானில் ஷூட்டிங்

    கஜகஸ்தானில் ஷூட்டிங்

    முடியாது, ஏன்னா, ஷூட்டிங் கஜகஸ்தான்ல நடக்குதுன்னு சொன்னோம். ஆனா, அவர் என்னால முடியதுன்னு தகராறு பண்ண ஆரம்பிச்சார். பிறகு ரன்வீர் கபூர் படத்துல நடிக்கப் போறேன். யாஷ்ராஜ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்குது. பெரிய கம்பெனி. ஆறு மாசம் என்னால வரமுடியாதுன்னு சொன்னார்.

    கிரிமினல் வழக்கு

    கிரிமினல் வழக்கு

    இதனால அருண் விஜய், விஜய் ஆண்டனி கால்ஷீட் வீணாகிடக் கூடாதுன்னு அந்த நடிகை இல்லாம, அக்‌ஷராவை புக் பண்ணி நடிக்க வச்சோம். இதனால 27 நாள் ஷூட்டிங்கான செலவை அந்தப் பொண்ணுதான் கொடுக்கணும். அதனால தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா சங்கங்கள்ல புகார் கொடுத்துட்டு கோர்ட்லயும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கோம் என்றார்.

    English summary
    Producer Siva explained why he had sued Arjun reddy actress Shalini pandey over agni siragugal issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X