இயக்குநரே முடிவாகல.. அதுக்குள்ள துர்கா பட போஸ்டர்களை வெளியிட என்ன அவசரம் ராகவா லாரன்ஸ்?

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ருத்ரன், சந்திரமுகி 2 என ஏகப்பட்ட படங்களில் கமீட் ஆகி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள நிலையில், துர்கா படத்தின் மிரட்டலான இரண்டு லுக் போஸ்டர்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

கார் க்ளீனர்

கார் க்ளீனர்

பிரபுதேவா மாஸ்டரை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட நடன இயக்குநர் என்றால் அது நம்ம ராகவா லாரன்ஸ் தான். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனிடம் கார் க்ளீனராக வேலை பார்த்து வந்த லாரன்ஸின் திறமையை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை டான்சர் யூனியனில் சேர்த்து விட்டார்.

சிரஞ்சீவி படத்தில் அறிமுகம்

சிரஞ்சீவி படத்தில் அறிமுகம்

ராகவா லாரன்சின் நடன திறமையை பார்த்து வியந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி 1997ல் வெளியான தனது ஹிட்லர் படத்திற்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை அளித்தார். அந்த படத்தின் நடனம் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், சிரஞ்சீவியின் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கும் நடனம் அமைத்தார்.

சிறு சிறு வேடங்களில்

சிறு சிறு வேடங்களில்

டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான சம்சார சங்கீதம் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடி திரையில் முதன் முறையாக தோன்றிய ராகவா லாரன்ஸ், சிக்கு புக்கு ரயிலே பாடலில் பேக்ரவுண்ட் டான்சராக ஆடியிருப்பார். ஸ்பீட் டான்சர் எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராகவா லாரன்ஸுக்கு முதல் படமே தோல்வியாக முடிந்தது. தல அஜித்தின் உன்னைக் கொடு என்னை தருவேன், பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன், மாதவனின் பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

அந்த மேஜிக்

அந்த மேஜிக்

நடிகராக வேண்டும் என ராகவா லாரன்ஸ் விரும்பியதை பூர்த்தி செய்த மேஜிக் அற்புதம் படத்தின் மூலமாக நடைபெற்றது. 2002ம் ஆண்டு இயக்குநர் அற்புதன் இயக்கத்தில் வெளியான அற்புதம் படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால், அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் கை கொடுக்கவில்லை.

பேய் ஹிட்

பேய் ஹிட்

பேய் படங்களை காமெடி கலந்து தரமாக கொடுத்தால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என நம்பிய ராகவா லாரன்ஸ் 2007ம் ஆண்டு தனக்கான கதையை உருவாக்கி தானே அந்த படத்தை இயக்கி நடித்து பேய் ஹிட் கொடுத்தார். முனி படத்தின் வெற்றி தான் காஞ்சனா பட வரிசை உருவாக அஸ்திவாரம் போட்டது.

காஞ்சனா சீரிஸ்

காஞ்சனா சீரிஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் வேட்டையையும் நடத்தின. ஆனால், மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்த படங்கள் வெற்றி பெறாமல் சொதப்பின.

நல்லா செட்டாகுது

நல்லா செட்டாகுது

ராகவா லாரன்ஸின் தோற்றத்துக்கு பேய் படங்கள் நல்லா செட் ஆகுது என்பதை உணர்ந்து கொண்ட அவர் தொடர்ந்து ஏகப்பட்ட பேய் படங்களில் நடித்து வருகிறார். பேய்க்கும் பேய்க்கும் சண்டை போட வைத்தே கல்லா கட்டி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்த த்ரில் படமாக துர்கா எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

மொட்டை தலையுடன்

மொட்டை தலையுடன்

இந்நிலையில், நேற்று துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மொட்டை தலையுடன் நீண்ட தாடியுடன் அகோரி போல பார்க்கவே பயமாக இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

செல்ஃபி லுக்கா

செல்ஃபி லுக்கா

அடுத்ததாக மொட்டை தலையுடன் மட்டும் இல்லை முடியுடனும் நடிக்கிறேன் என அதிக தலை முடியுடன் மூஞ்சிக் கிட்ட வைத்து செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு இன்னொரு லுக்கையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

டைரக்டர் நான் இல்லை

டைரக்டர் நான் இல்லை

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள ராகவா லாரன்ஸ் அந்த படத்தில் வரும் நயன்தாராவின் கதாபாத்திர பெயரான துர்கா எனும் பெயரை கொண்டு புதிதாக நடிக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்கப் போகிறார் என எண்ணிய நிலையில், இயக்குநர் நானில்லை விரைவில் அறிவிக்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.

அவசரம் ஏன்

அவசரம் ஏன்

இன்னும் துர்கா படத்திற்கு இயக்குநரே முடிவாகாத நிலையில், அதற்குள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட என்ன அவசரம் ராகவா லாரன்ஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த இரண்டு லுக்கையும் பாராட்டியும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

சந்திரமுகி 2 எப்போ

சந்திரமுகி 2 எப்போ

ருத்ரன் படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென துர்கா படத்தின் அறிவிப்பை இப்படி போஸ்டர்கள் போட்டு வெளியிடுவதை பார்த்த ரசிகர்கள் அப்போ சந்திரமுகி 2 படத்தை எப்போ ஆரம்பிப்பீர்கள் என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

காஞ்சனா 4

காஞ்சனா 4

காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. காஞ்சனா 3 திரைப்படத்தில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், கதையில் சுவாரஸ்யம் இல்லாததும் படம் மக்கள் மத்தியில் பெருசா போகல, ஆனாலும் காஞ்சனா 4 திரைப்படத்திற்காகவும் ஏகப்பட்ட ரசிகர்கள் வெயிட்டிங்! அதை பற்றிய அறிவிப்பை லாரன்ஸ் இப்போதைக்கு வெளியிட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X