Bigg boss 3 tamil: ரைஸா கம்முன்னு இருக்காரே.. லொஸ்லியா பத்தி கூட பேசலையே!
சென்னை: எங்கு பார்த்தாலும் லொஸ்லியா ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலை. அந்த அளவுக்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது லொஸ்லியா ஆர்மியின் பெரும்பான்மை.
பிக் பாஸ் 3 வது சீசன் இப்போதுதான் சூடு பிடித்து களை கட்டத் தொடங்கியுள்ளது. நாமினேஷன் வாரம் ஆரம்பித்து விட்டது. உள்ளுக்குள் கதறல், கண்ணீரும் கம்பலையும் களை கட்டியுள்ளது. ஜாலிக்கும் பஞ்சமில்லை.
இந்த நிலையில் அடுத்த ஓவியா லொஸ்லியாதான் என்று ஒரு குரூப் கிளம்பி விட்டது. காரணம், லொஸ்லியாவை நிறையப் பேருக்கு பிடித்துள்ளது. அவருக்கென ஆர்மியும் தொடங்கி கடலை போடுவதும் களை கட்டியுள்ளது.

ரைஸா வில்சன்
சரி இந்த நேரத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன மாதிரி இதற்கு ரியாக்ட் செய்கிறார்கள் என்று பார்த்தோம். நமது கண்ணில் பட்டவர் போன சீசனில் அலை பரப்பிய ரைஸா வில்சன். ரைஸாவின் டிவிட்டர் பக்கத்தில் போய்ப் பார்த்தால் சத்தமே இல்லாமல் இருக்கிறார். பிக் பாஸ் 3 குறித்து எந்த டிவீட்டும் அவர் போடவில்லை.
லொஸ்லியாவைப் பிடிக்குமா
லொஸ்லியாதான் படு ஹாட்டாக பேசப்பட்டு வருகிறார். ஆனால் ரைஸா அதுகுறித்து கமெண்ட் எதுவும் இதுவரை போடவில்லை. மாறாக தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரீஷ் கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அழகான படம் மூலமாக. பார்க்க ஓவியம் போல காதலுடன் இருக்கிறது அந்த புகைப்படம்.
ஜிவி பிரகாஷ்
அதேபோல இன்னொரு டிவீட்டில் ஜிவி பிரகாஷுக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். கண்ணடித்து கூட எடுத்த போட்டோவைப் போட்டு மனசை சுண்டி இழுக்கிறார் ரைஸா.
ரைஸா ஒரு அழகி
ஆயிரம்தான் சொல்லுங்க.. ரைஸாவும் ரொம்ப அழகுதான். செதுக்கி வைத்த சிற்பம் போல, அளவான, அழகான சிரிப்புடன் ஒரு தேவதைக்கு நிகரானவர். அதனால்தான் இன்னும் பலர் அவர் பியார் பிரேமா காதலுடன் வலம் வருகின்றனர். உண்மைதானுங்களே. பார்க்கலாம், இந்த சீசனில் யார் ரைஸா இடத்தைப் பிடிக்கிறார்கள் என்று.


Click it and Unblock the Notifications











