#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்!

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அரசியல் பேசாதது ஏன் என தெரியவந்துள்ளது.

Recommended Video

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி- வீடியோ

சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசாதது ஏன் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சன் டிவியில் ஒளிபரப்பட்ட இந்த விழாவியில் ரஜினி என்ன பேசப் போகிறார் என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

Why Rajini avoided politics in Petta audio launch?

பேட்ட விழாவில் ரஜினி நிச்சயம் அரசியல் குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியல் பற்றி பேசாமல், பேட்ட படத்தை பற்றி மட்டுமே பேசினார். இதை தவிர்த்து கஜா புயல் பற்றி மட்டுமே அவர் கருத்து தெரிவித்தார்.

இதனால் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. 2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட அரசியல் பன்ஞ்ச் வசனம் பேசிய அவர், பேட்ட விழாவில் ஏன் அரசியலை தவித்தார் என சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்தோம்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது, "பேட்ட சன் பிக்சர்ஸ் படம். சன் டிவி குழுமம் திமுக குடும்பத்தை சார்ந்தது. ஏற்கனவே சர்கார் பட விழாவில் நடிகர் விஜய் ஏகத்துக்கும் பன்ஞ்ச் வசனங்கள் பேசியதை திமுக ரசிக்கவில்லை.

இந்நிலையில் பேட்ட விழாவில் ரஜினி அரசியல் பேசினால், அது சன் டிவி குழுமத்துக்கும் திமுகவுக்குமான உறவில் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். இதனை யோசித்து தான் அவர் அரசியல் பேசுவதை தவிர்த்துவிட்டார்.

இதுவும் இல்லாமல் பேட்ட இசை வெளியீட்டு விழா என்பது அரசியல் மேடை அல்ல. அது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். பொதுவாக தன்னால் அடுத்தவருக்கு சங்கடம் ஏற்படுவதை ரஜினி விரும்பமாட்டார். அதனால் தான் கலாநிதிமாறன் எந்த கோரிக்கையும் வைக்காமலேயே, அரசியல் பேசுவதை ரஜினி தானாகவே தவிர்த்துவிட்டார்.

இல்லை என்றால் முன்பு ஏ.சி.சண்முகம் கல்லூரி விழாவில் அரசியல் பேசியது போல், சாய்ராம் கல்லூரி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்திருக்க முடியும். ரஜினியின் பெருந்தன்மையான குணமே அரசியல் பேச்சை தவிர்த்ததற்கு காரணம்", என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X