ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா? சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்!

சென்னை: தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதித்ய அருணாச்சலம் என பெயர் வைத்தற்கான காரணத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும 167வது படம் தர்பார். இந்த படத்தில்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நிலவில் இறங்கியது போல்

நிலவில் இறங்கியது போல்

இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ரஜினிகாந்தின் நடிப்பு, சின்சியாரிட்டி குறித்து புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, சின்ன வயதில் நிலாவைப் பார்த்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது நிலாவில் இறங்கியது போல இருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக இப்போது நிற்கிறேன்.

மூத்த ரசிகன்

மூத்த ரசிகன்

உங்கள் எல்லாரையும் விட நான் தான் ரஜினிகாந்தின் மூத்த ரசிகன். மேடையில் நிற்பதை விட ரசிகர்களோடு அமர்ந்து விடுவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஸ்டைலில் ரஜினி

ஸ்டைலில் ரஜினி

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். ஸ்டைலில் எம்ஜிஆருக்குப் பிறகு ரஜினிதான்.

சாதித்தவர் ரஜினி

சாதித்தவர் ரஜினி

இப்போதிருக்கும் நடிகர்கள் அனைவரிடமும் ரஜினிகாந்தின் சாயல் கட்டாயம் இருக்கிறது. தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் தனது உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் சாதித்தவர் ரஜினி என்றார்.

ஆதித்ய அருணாச்சலம்

ஆதித்ய அருணாச்சலம்

பின்னர் மீண்டும் இறுதியாக பேசிய இயக்குநர் முருகதாஸ் கடந்த 15 ஆண்டுகளில் இப்படி ஒரு சண்டைக்காட்சியை நீங்கள் பார்த்திருக்க முடியாது என்றார். மேலும் தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்ய அருணாச்சலம் என்பதற்கு பின்னால் உள்ள ஒரு கதையையும் கூறினார் முருகதாஸ்.

அப்பாவின் பெயர்

அப்பாவின் பெயர்

அதாவது இயக்குநர் ஏஆர் முருகதாஸின் மகன் பெயர் ஆதித்யா, முருகதாஸின் தந்தை பெயர் அருணாச்சலம். அவர்கள் இருவரின் பெயரையும் இணைத்து ஆதித்ய அருணாச்சலம் என ரஜினி கதாப்பாத்திரத்தை உருவாக்கிவிட்டதாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X