ரஜினி எதிர்கொண்ட தர்மசங்கடமான சூழல்கள்.. இவ்வளவுக்குப் பிறகும் இந்த குதிரை ஓட காரணம் எதுனு தெரியுமா?
சென்னை: சிவாஜி கெய்க்வாட் சென்னைக்கு புறப்பட்டு வந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிவிடவில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி நிற்கிற ரஜினிகாந்த் எதிர்கொண்ட சவால்களும் இன்னல்களும் பல பல. இதில் தொழிலைக் கடந்து சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட இன்னல்களை கடந்தும் ஒரு மனிதர் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் என்றால் அது ஏதோ சாதாரண விஷயம் இல்லை. அப்படி அவர் எதிர்கொண்ட சவால்கள், தர்மசங்கடமான சூழல்கள் போன்றவற்றில் சில வற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
ரஜினிகாந்த் தனது குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தவர். அப்பா மற்றும் அண்ணனின் கண்டிப்பில் வளர்ந்தார். சினிமா மீது இருந்த ஆர்வம் அவரை கண்டக்டராக தொடர்ந்து டிக்கெட் கிழித்து காலத்தை ஓட்ட மனசு இடம் கொடுக்கவில்லை. அதன் பின்னர் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்புகள் தேடி தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார். படப்பிடிப்புத் தளத்தில் பரட்டை என்று எல்லாம் அவரைக் கிண்டல் செய்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் எதை பரட்டை என்று விமர்சித்தார்களோ அதையே தனது ஸ்டைலாக மாற்றிக் காட்டினார் ரஜினி.

ஒரு மேடையில் கூறும்போதும், படப்பிடிப்புத் தளத்தில் சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதற்கு, ஒரு தயாரிப்பாளர் ரஜினியை மிகவும் கேவலமாக ட்ரீட் செய்து, சம்பளமும் கிடையாது, என்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விரட்டி அடித்துள்ளார். அதன் பின்னர் ரஜினிகாந்த் வைராக்கியமாக எடுத்த முடிவு, அதே தயாரிப்பாளர் முன்பு, வெளிநாட்டு காரை வாங்கி, அதில் சென்று நானும் ஒரு ஆள்தான், நடிகர் தான் என்று பதிலடி கொடுத்தார்.
போதைப் பழக்கம்: சூப்பர் ஸ்டார் ஒருவரை காதலிக்கிறார் என்றால், அவரைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையிலும் ஒரு ஆழமான காதல் தோல்வி இருக்கிறது என்பதை அவரே ஒரு மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த காதல் தோல்வியில் இருந்தும் மீண்டு வந்து நடித்தார். ஒரு கட்டத்தில் போதைப் பழக்கத்தால் கடுமையான உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டார். அவரை விரும்பாத சில விஷமிகள், அவ்வளவுதான் இனி ரஜினி பிழைப்பதே சிரமம் என்று கொக்கரித்துக் கொண்டு இருந்தபோது, பெரும் மருத்துவ போராட்டத்திற்குப் பின்னர் மீண்டு வந்தவர் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது போல மாஸ் கம்பேக் கொடுத்தார்.

மனதளவில் சோர்வு: தொழில் ரீதியான போட்டிகள், உடல்நிலை பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தால், தனது மூத்த மகளின் விவாகரத்து விவகாரம் அவரை மிகவும் கவலையில் ஆழ்த்திவிட்டது. மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் ஆகியோரின் விவாகரத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தியது. இருவரையும் சமாதானபடுத்தும் முயற்சியில் ரஜினி ஈடுபட்டார் என்று எல்லாம் தகவல்கள் வெளியானது. ஆனாலும் அது கை கூடவில்லை.
வைராக்கியம்: இப்படி பல பிரச்னைகளையும் சவால்களையும், எதிர் கொண்டவர், தமிழ் சினிமாவிலும் அவ்வளவுதான், இதுக்கு மேல இந்த குதிரை ஓடாது என்று எல்லாம் விமர்சித்தார்கள். ஆனால், இன்றைக்கும் தனது ஸ்டைல், மாஸ் போன்றவற்றால் ஹிட் கொடுத்து வருகிறார். கடைசியாக ஜெய்லர் படத்தில் ரூபாய் 850 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தவர் ரஜினிகாந்த். ரஜினி தனது திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் எத்தனை முறை விழுந்தார் என்பதைக் காட்டிலும் அத்தனை முறையும் எழுந்தார் என்பதுதான் முக்கியம். ரசிகர்கள் அவரிடத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடமே அதுதான். அதே நேரத்தில் இவ்வளவுக்குப் பிறகும் அவர் ஓடிக் கொண்டு இருக்க முக்கிய காரணமே, வைராக்கியம் தான். தான் உதாசினப்படுத்தப்பட்ட இடத்திலேயே வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம்.



Click it and Unblock the Notifications











