twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல்... ஏன் அமைதி காக்கிறார் ரஜினிகாந்த்?

    By Shankar
    |

    Recommended Video

    அரசியல்... ஏன் அமைதி காக்கிறார் ரஜினிகாந்த்?- வீடியோ

    சென்னை: போருக்குத் தயாராகுங்கள் என்று ரஜினி அறிவித்ததிலிருந்து அவரது ரசிகர்களும், பொது மக்களும் ரஜினியின் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் எனக் காத்திருக்கின்றனர்.

    'இப்போ நான் என் வேலையைப் பார்க்கிறேன்... நீங்க உங்க வேலையைப் பாருங்க' என்று கூறிய ரஜினி 2.ஓ மற்றும் காலா பட வேலைகளில் மும்முரமாக இருந்தார். இப்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பு, டப்பிங் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

    அடுத்த படம் என்னவென்று அறிவிக்கவில்லை. இமயமலை, வெளிநாடு என எங்கும் செல்லவும் இல்லை.

    சந்திப்புகள்

    சந்திப்புகள்

    சென்னையில் உள்ள தன் வீடு, அலுவலகம் அல்லது கேளம்பாக்கம் பண்ணையில்தான் ரஜினி இருக்கிறார். ஆனால் தனியாக அல்ல. தினசரி துறைவாரியாக நிபுணர்கள், ஆலோசர்கள், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். தன்னை முந்திச் செல்லும் கமல் ஹாஸனின் நகர்வுகளை புன்னகையுடன் கடந்து செல்கிறார். 'நல்ல விஷயம்தானே.. யார் செய்தால் என்ன?' என தன்னிடம் கேட்கும் நண்பர்களுக்கு பதிலளிக்கிறார்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    எப்போதுதான் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார்? ஏன் அமைகி காக்கிறார்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில், "நிச்சயம் அறிவிப்பார். விரைவில் தன் அரசியல் திட்டங்களைப் பேசுவார். அது பிறந்த நாளின் போது, புத்தாண்டிலா என்பதை மட்டும் அவர்தான் சொல்ல வேண்டும்," என்கிறார் ரஜினிக்கு நெருக்கமான ஒரு நண்பர்.

    தெளிவாகத்தானே சொன்னார்

    தெளிவாகத்தானே சொன்னார்

    ரஜினி ஒரு முறை கூட நேரடியாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லையே... இன்னும் பூடகமாகத்தானே பேசி வருகிறார்? என்று அவரிடம் கேட்டபோது, "இதை விட தெளிவாக என்ன சொல்ல வேண்டும். 'என்னை நீங்க நல்லா வாழ வச்சீங்க... நீங்களும் நல்லாருக்கணும்னு நான் நினைக்கிறது தப்பா? அதுக்காகத்தான் நான் வரேன்னு சொன்னா நீ தமிழனான்னு கேக்குறாங்க?' என்று ரஜினி சொன்னது நினைவிரல்லையா?" என்றார் அந்த நண்பர்.

    அர்த்தம் இருக்கு

    அர்த்தம் இருக்கு

    "ரஜினி அமைதியாக இருப்பதில் அர்த்தம் இருக்கிறது. முதலில் இந்த ஆட்சி முடிய வேண்டும். அடுத்த அக்டோபரில் பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்தும் திட்டமிருப்பதாக ஒரு உறுதியான தகவல். எனவே ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரஜினி கட்சியை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன் ரசிகர்களை ஓரிருமுறை அவர் சந்திக்கக் கூடும்," என்கிறார் ரஜினியைச் சமீபத்தில் சந்தித்துவிட்ட வந்த ஒரு பிரமுகர்.

    ரஜினி Vs கமல்

    ரஜினி Vs கமல்

    அரசியல் களத்தில் தன்னுடைய மோதல் எந்தக் கட்சியோடும் இல்லை என்பதுதான் ரஜினியின் நிலைப்பாடு. யார் எதிர்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும், அமைதியாக கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் முதல்கட்டமாக தன் மன்றத்துப் பொறுப்பாளர்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் செய்தி.

    டிசம்பர் 12

    டிசம்பர் 12

    வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று தன் பிறந்த நாளில் போயஸ் தோட்ட இல்லத்தில் மற்றும் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்திக்கும் திட்டம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த நாளில் கட்சியை அறிவிக்காவிட்டாலும், தன் அரசியல் குறித்து ரஜினி பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sources say that Rajinikanth would be meet his fans on his birthday December 12th and revealed his political plans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X