நடிகைகள் நிலைமை மோசம்.. ரஜினி தன் மகள்களை நடிக்க வைக்காததற்கு இதுதான் காரணம்.. தலைவர் செம விவரம்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். அதற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், கமலுடன் சேர்ந்தும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே அவரது இரண்டு மகள்களுமே கேமராவுக்கு பின்னால் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். இளைய மகள் சௌந்தர்யா இப்போது வித் லவ் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் தனது மகள்களை ரஜினி நடிக்க வைக்காததற்கு காரணம் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் ரஜினியாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அந்த அளவுக்கு நடிப்பு மீது தீராத காதலை கொண்டிருக்கிறார். ஆனால் அவரது மகள்கள் தந்தை வழியில் நடிப்பை தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக இரண்டு பேருமே கேமராவுக்கு பின்னால் தங்களது திறமையை காண்பித்து வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்.
மூத்த மகள்: முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார். தனுஷுடன் திருமண வாழ்க்கையில் இருந்தபோதே 3 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவர் படம் இயக்கும் வேலைகளில் இருப்பதாக தெரிகிறது.

இரண்டாவது மகள்: இளைய மகள் சௌந்தர்யா ஆரம்பத்திலிருந்தே டைட்டில் டிசைன் செய்யக்கூடியவர். சந்திரமுகி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் அவர்தான் டைட்டில் டிசைன் செய்தார். தொடர்ந்து ரஜினியை வைத்து மோஷன் கேப்சரில் கோச்சடையான் படத்தை இயக்கினார். தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே அந்த அட்டெம்ப்ட்டை செய்திருந்தார். அதுமட்டுமின்றி கோவா படத்தை தயாரித்த அவர்; இப்போது வித் லவ் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
சௌந்தர்யா பேட்டி: இந்நிலையில் தானும், தனது சகோதரியும் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார். அவர் பேசுகையில், "எனது அப்பாவுக்கு சினிமாவில் ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. சினிமாவில் நடிகைகளுக்கு பெரிய எதிர்காலம் என்பதை எனது அப்பா உணர்ந்திருந்தார். நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்கு சினிமாவில் குறைந்த ஆயுள் இருக்கிறது என்பது தெரிந்தது. நாங்கள் நடிக்க வந்த பிறகு ஒருகட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை அப்பா விரும்பவில்லை.
மனநலம் பற்றி: அதனால் எங்கள் மனநலம் கஷ்டப்படும் என நினைத்திருக்கலாம். எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனது அப்பா சொன்னதை நான் ரொம்பவே சீரியஸாக எடுத்துக்கொண்டேன். அதுமட்டுமின்றி எனக்கு க்ரியேட்டிவ்வாக செய்ய பிடிக்கும். என்வே நான் கேமராவுக்கு முன் இருப்பதைவிடவும் கேமராவுக்கு பின்னால் இருப்பதையே விரும்பினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











