" முதல்வன் " படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான்.. பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைத்து மொழிகளிலும் பிரபலமானவராக உள்ளதால் அனைத்து மொழிகளிலும் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெறுகின்றன
அண்ணாத்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை பிரபல நடிகர் தனியா யூட்யூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

வசூலுக்கு மேல் வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றுவரை தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வசூலுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. ரஜினிகாந்த் படம் செய்த வசூலை அவரது திரைப்படங்களே முறியடிக்கும் சரித்திரமும் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அண்ணன்-தங்கை பாசத்தை
தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த சிறுத்தை சிவா ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ரஜினி நடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக வெற்றி பெற்றது. அடுத்த படத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரஜினிகாந்தை மனதில் வைத்து முதல்வன்
இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். அதாவது இயக்குநர் ஷங்கர் முதல்வன் படத்தை ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினாராம். அந்த கதையை ரஜினிகாந்திடம் அப்போது கூறியபோது ரஜினிகாந்துக்கும் கதை பிடித்துப்போய் விட்டது.

நடிக்க முடியாமல் போனதற்கு காரணம்
ஆனால் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக உடனே நடிக்க வேண்டாம் என முடிவு செய்த ரஜினிகாந்த் ஷங்கரிடம் இப்போதைக்கு முதல்வன் படத்தை எடுக்க வேண்டாம் உங்ககிட்ட இருக்கும் அழகிய குயிலே என்ற படத்தை முதலில் எடுங்கள் என்ற வேண்டுகோளை விடுத்தாராம்.
ஆனால் ஷங்கரின் நிலைமையோ வேறு 10 மாத குழந்தையை போல முதல்வன் படத்தை எழுதி முடித்துவிட்டு சுமந்து கொண்டிருந்தாராம். அதற்கு மேலும் சுமக்க முடியாது என்பதற்காக ரஜினிக்கு பதிலாக அர்ஜுனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











