Rajinikanth: தயாரிப்பாளர் கொடுத்த கார்.. ரஜினியின் பணக்கார ஃபீலிங் பேச்சு.. இதுதான் காரணமா?
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல நாடுகளில் ரசிகர்கள் உள்ள நிலையில், இந்தியாவிலேயே சம்பளம் வாங்கும் நடிகராக மாஸ் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில், இப்போதான் நான் பணக்காரனா உணருறேன் என பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யப்பா இது உலக மகா நடிப்புடா சாமி எங்க நெட்டிசன்கள் ரஜினிகாந்தின் பேச்சை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் ஏன் அப்படி சொன்னார்?: இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஏன் அப்படி பேசினார் என்பதற்கு வலைப்பேச்சு அந்தணன் தனது புதிய வீடியோவில் விளக்கம் கொடுக்கும் வகையில் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
100 கோடி 200 கோடி என நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு சொகுசு காரை பரிசாக அளித்த நிலையில், இப்போதான் நான் பணக்காரன் உணருகிறேன் ரஜினி பேசியதற்கு பின்னாடி ஒரு பேக் ஸ்டோரியை இருக்கிறது எனக்கூறியுள்ளார்.

கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினி: ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் துணை நடிகராக இருந்தபோது, தயாரிப்பு நிறுவனத்தின் வாகனத்தில் தான் செல்வாராம். கவுண்டமணி வீடு ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தது. ரஜினியின் வீடு மியூசிக் அகாடமிக்கிட்ட இருந்துச்சு.. ஒவ்வொருத்தரையா இறக்கி விட்டுட்டு கடைசியாத்தான் ரஜினியை இறக்கி விடுவாங்களாம்.. அதற்குள் பசி வந்து மயக்கமே வந்து விடுமாம்.
இதையெல்லாம் அப்போதே ரஜினி கவுண்டமணியிடம் சொல்லி ஃபீல் பண்ணியிருக்கிறார். சொந்தமாக சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும், தயாரிப்பாளர் காசுல ஒரு கார் பரிசாக கிடைத்த போது தான் அவருக்கு அந்த பழைய வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வர அப்படி பேசியிருப்பதாக அந்தணன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











