தனுஷுடன் நடிக்கணுமா?.. நோ நோ தனியாத்தான் ஜெயிக்கணும்.. அதிரடி காட்டிய‌ ரஜினி.. தலைவர் கெத்துதான்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர்.சி வெளியேறியதைத் தொடர்ந்து பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குநராக ஃபிக்ஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தின் தோல்வியை ரஜினி கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கமாட்டார். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் சென்சேஷனல் இயக்குந்ராக வலம் வந்ததால்; கமலுக்கு எப்படி விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் கூலியிலும் வெற்றி கிடைக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது.

சுந்தர்.சி வெளியேற்றம்: ஜெயிலர் 2வை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் சுந்தர் வெளியேறிவிட்டார். அவர் வெளியேற்றத்தை அடுத்து பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் சொன்ன கதை ரஜினிக்கும், கமலுக்கு பிடித்துவிட்டதாகவும்; அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் அறிவிப்பு வந்தால்தான் உறுதியாகும்.

Why Rajinikanth Rejected the Idea of Acting with Dhanush Shocking Revelation
Photo Credit:

வாழ்நாள் சாதனையாளர் விருது: இது ஒருபக்கம் இருக்க திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக அவருக்கு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட ரஜினி, 'இந்த 50 வருடங்கள் எனக்கு 10 அல்லது 15 வருடங்கள் போன்றுதான் இருக்கிறது. நடிப்பை நான் அவ்வளவு நேசிக்கிறேன். இன்னும் நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் நான் இதேபோல் ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்" என்ற நெகிழ்ச்சியோடு பேசினார்.

யானை இல்லை குதிரை: ரஜினியின் கரியரை பொறுத்தவரை ராகவேந்திரா, பாபா, லிங்கா என தோல்வி படங்களும் இருக்கின்றன. அவர் எப்போதெல்லாம் தோல்வி படங்களை கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் அவ்வளவுதான் என்று பேச்சுக்கள் கிளம்பும். ஆனால் சந்திரமுகி விழாவில் பேசியதுபோல் அவர் குதிரை மாதிரி உடனே எழுந்து வெற்றியை கொடுத்துவிடுவார். லிங்கா படத்தின் தோல்வியின்போதும் அதேமாதிரிதான் பேசினார்கள். அந்த சூழலில் தனுஷுடன் நடிக்கலாம் என்று சொன்ன ஐடியாவை மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

லிங்குசாமி கொடுத்த பேட்டி: இயக்குநர் லிங்குசாமி கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "ரஜினியை வைத்து திருப்பதி பிரதர்ஸ் கம்பெனி ஒரு படம் செய்வதாக இருந்தது. இயக்குநராக முருகதாஸைத்தான் ஃபிக்ஸ் செய்திருந்தோம். அவர் தனுஷையும், ரஜினியையும் சேர்த்து ஒரு படம் செய்யலாம் என்று ஐடியா சொன்னார். லிங்கா பட தோல்விக்கு அடுத்து இது நடந்தது. முருகதாஸ் சொன்ன ஐடியாவை ரஜினியிடம் சொன்னேன். அதற்கு அவரோ, 'தனுஷுடன் நடிக்கணுமா? நோ நோ இந்த மாதிரி நேரத்தில் நாம் தனியாதான் ஜெயிக்கணும்' என்று கூறிவிட்டார். பிறகு அவரிடம் சென்று இன்னொரு கதையை சொன்னோம். அவரும் ஒத்துக்கொண்டார்.ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் எங்கள் கம்பெனிக்கு நடக்கவில்லை' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X