Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கேஜிஎப் சாப்டர் 2' படத்தில் நடிக்க மறுத்த நம்ம 'ராஜமாதா'... ஏன், எதுக்கு? இதுதான் காரணமாமே!
பெங்களூரு: கேஜிஎப் 2 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கன்னட ஹீரோ யஷ், நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதால் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் யஷ்.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் இன்ஸ்பிரேஷனா.. கத்தியெல்லாம் கீழே கிடக்குது.. டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

ஶ்ரீனிதி ஷெட்டி
இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இதையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் மாதமும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த மாதமும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ரவீணா டாண்டன்
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ரவீணா டாண்டன் இணைந்தார். அவரும் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு இதை உறுதிப்படுத்தியுள்ளது. அவர், படத்தில் பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் மைசூரில் படமாக்கப்பட்டன.

ரம்யா கிருஷ்ணன்
ரவீணா நடிக்கும் கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம்தான் கேட்டுள்ளனர் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் படக்குழு பேசியுள்ளது. ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க முடியாததால், ரவீணாவை படக்குழு ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆக்ஷன் காட்சிகள்
இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. வில்லன்களுடன் யஷ் மோதும் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இல்லாத அளவு படமாக்கப்பட இருக்கின்றன.
வரும் ஜூலை மாதம், இந்தி, தமிழ், கன்னடம் உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.