இலங்கை தமிழர்கள் பட்ட கஷ்டத்தை அப்பட்டமாக்கிய இனம் படம்.. இதுவரைக்கும் ரிலீஸ் ஆகாத காரணம் என்ன?..
சென்னை: சினிமா உலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நடைபெற்றுவிடுகிறது. அதில் ஒரு சம்பவம் தான் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சுந்தர்.சி-யின் மத கஜ ராஜா. இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகவேண்டிய படம். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போய், ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆனது. படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்ததால் படக்குழுவுக்கு மட்டும் இல்லாமல் மொத்த தமிழ் திரையுலகத்துக்குமே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மிகப்பெரிய அளவில் அறிவிப்பு வெளியாகி, படம் ரிலீஸ் ஆகமல் உள்ள மிக முக்கியமான படம்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இனம் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான இனம் படம். இதுவரை ரிலீஸ் ஆகவேயில்லை. 2014ஆம் ஆண்டே படம் ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், முகாம்களில் மக்கள் என்ன மாதிரியான இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்களுக்கு பெரும் ஆவல் உள்ளது.

தடை: இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் படம் முறையாக சென்சார் செய்யப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதியே ரிலீஸ் ஆனது. ஆனால் படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் தடை விதிக்கப்படுகிறது. படத்தில் கருணாஸ், கரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, ரிலீஸ் ஆனது. இதுவரை டிரைலரை, கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஓடிடி ரிலீஸ்: படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கடந்த 2021ஆம் ஆண்டே தெரிவித்தார். ஆனால் இதுவரை படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் டிரைலருக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த டிரைலரின் கமெண்ட் செக்ஷனில் ரசிகர்கள் இப்போதும் படத்தை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என கேள்வி கேட்டே வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











