திடீரென சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் நடந்ததை காட்டிய கமல்.. எல்லாம் அந்த விஷயத்துக்காகத்தானா?

சென்னை: சனிக்கிழமை வீட்டில் நடக்கும் எதையும் காட்டாமல் இருந்த நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சனிக்கிழமை எபிசோடை கமல் போட்டுக் காட்டியது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரியங்கா, சஞ்சீவ் உடன் கேள்வி எழுப்பினார், அக்‌ஷராவை அழ வைத்தார். அபிநய் அக்‌ஷராவை அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

பின்னர் பாவனி மற்றும் அமீர் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக பேசிய ரொமான்டிக் கலந்துரையாடல்களையும் போட்டுக் காண்பித்தனர்.

வழக்கமாக என்ன நடக்கும்

வழக்கமாக என்ன நடக்கும்

சனிக்கிழமை அன்றே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெறும் அதனால் சனிக்கிழமை வேறு எந்த நிகழ்ச்சியும் வீட்டில் நடைபெறாது. மேலும், தொடர்ந்து ஷூட்டிங் செய்த டயார்டில் போட்டியாளர்கள் போய் தூங்கி விடுவார்கள்.

இரண்டு பாதியாக நடந்த ஷூட்டிங்

இரண்டு பாதியாக நடந்த ஷூட்டிங்

ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் ஷூட்டிங் இரண்டு பாதியாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நடைபெற்ற காரணத்தினால், சனிக்கிழமை இரவு நடந்த சில காட்சிகளை ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் காட்ட முடிந்தது. மேலும், சனிக்கிழமை கமல் பேசி சென்ற பிறகு ஹவுஸ்மேட்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு என ஞாயிற்றுக்கிழமையே தெரிந்து கொள்வது ரொம்பவே சுவாரஸ்யமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சீவிடம் பிரியங்கா கேள்வி

சஞ்சீவிடம் பிரியங்கா கேள்வி

ஸ்ட்ராங் பிளேயர் என நீங்க சொல்லக் கூடாது மக்கள் சொல்லணும் என கமல் சனிக்கிழமை எபிசோடில் சாட்டையை சுழற்றிய நிலையில், ரொம்பவே அப்செட்டான பிரியங்கா சஞ்சீவ் இடம் அதுபற்றி பேச முற்பட்டார். டார்கெட் பண்றீங்க என்கிற வார்த்தை பெருசு ஆனால், நமக்குள் நடந்த பேச்சுவார்த்தைகள் பெரிதளவில் இல்லை. நீங்க வருத்தப்படாதீங்க என சஞ்சீவ் ஆறுதல் கூறினார்.

அக்‌ஷராவுக்கு அபிநய் ஆறுதல்

அக்‌ஷராவுக்கு அபிநய் ஆறுதல்

திடீரென அக்‌ஷரா டீமில் வந்து உட்கார்ந்து கொண்ட அக்‌ஷராவிடம் சில கேள்விகளை பிரியங்கா எழுப்ப உடனே மறுபடியும் பழையபடி அழுகாச்சி டிராமாவை போட ஆரம்பித்து விட்டார். பிரியங்கா ஒரு பக்கம் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல மறுபக்கம் அபிநய் அக்‌ஷராவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன காட்சிகளை போட்டு ரசிகர்களை ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டனர்.

அமீர் பாவனி ரகசிய பேச்சு

அமீர் பாவனி ரகசிய பேச்சு

ராஜுவை ரொம்ப நல்லவன்னு நீ கூட ஏன் சொன்ன அமீர் என யாருக்குமே கேட்காதபடி மிகவும் லோ வால்யூமில் பாவனி பேசும் போது ரசிகர்கள் மேலும் கடுப்பாகி விட்டனர். ஏற்கனவே பிரியங்கா லவுட் வாய்ஸ்க்காக வால்யூமை குறைச்சி வச்சிருக்கோம். இப்போ இப்படி நீ எவ்ளோ சத்தம் வச்சாலும் கேட்காத மாதிரி பேசுறியேமானு காண்டாகி விட்டனர்.

இது தொடருமா

இது தொடருமா

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இப்படி பிக் பாஸ் ஷூட்டிங் பிரித்து நடத்தப்பட்டால் எவிக்‌ஷன் யார் என்கிற ரகசியம் முன்னதாக கசிந்து விடாது என்றும் சனிக்கிழமை நடந்த சுவாரஸ்யங்களும் தெரியும் என ரசிகர்கள் ஆசைபடுகின்றனர். ஆனால், கமல் சார் கால்ஷீட் இதற்கு வரும் வாரங்களில் ஒத்துழைக்குமா இல்லை உடல் நலன் கருதி இப்படியே மேலும், சில வாரங்கள் ஷூட்டிங் இரு பாதியாக நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X